74
(8) புனலாட்டுப் பத்து

 


74. விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
  பசும்பொ னவிரிழை பைய நிழற்றக்
  கரைசேர் மருத மேறிப்
  பண்ணை பாய்வோ டண்ணறுங் கதுப்பே.

இதுவுமது.

  குறிப்பு. விசும்பிழி தோகை-வானிலிருந்து இறங்குகின்ற மயி
லது. சீர்போன்றிசின்-அழகு போன்றது. இழை-ஆபரணம். நிழற்ற-
ஒளியைச் செய்ய. கரைசேர் மருதம்; ஐங். 7, குறிப்பு. பண்ணை பாய்
வோள்-நீர் விளையாட்டிடத்தே பாய்வோளது. கதுப்பு-கூந்தல்.
கதுப்பு தோகைச் சீர் போன்றிசின். கதுப்புக்குத் தோகை : நற்.
264 : 3-5; குறுந். 225 : 6-7; புறநா. 146 : 8-9.

  (மேற்) அடி, 1. முற்றுச்சொல் சின் அசைக்கண்படுதல் (தொல்.
இடை. 47. ந.) மு. 72-4. ‘தலைவி புலவி நீங்கித் தன்னொடுபுனலா
டல் வேண்டிய தலைவன் முன் புனலாடியதனை அவள் கேட்பத்
தோழிக்கு உரைத்தது? (தொல். கற்பு. 50, ந.)            ( 4 )