எ-து தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக்
கேட்டுத் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தானும் தனியே
போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத்
தலைமகன் சென்று தான் அறியான்போல நகையாடிக்கூறிக் கைப்
பற்றியவழி அவள் தோழி சொல்லியது.
குறிப்பு. அமர்த்தகண்ணள்-போரைச் செய்கின்ற கண்ணை
யுடைய பரத்தை. அறியாய்-அறியமாட்டாய். மகளை; ஐ : சாரியை.
எம் என்றது பரத்தையை உளப்படுத்தியது. எம் பற்றியோய் நீ யார்
மகன்? ( 9 )