எ-து தன்னை யொழியப் புதுப்புனலாடித் தாழ்த்துவந்த தலை
மகனோடு தலைமகள் புலந்து சொல்லியது.
குறிப்பு. புலக்குவேமல்லேம் - புலவிகொள்ளமாட்டோம். மக
ளிர்க்கு-பரத்தையர்க்கு. தோள்துணையாகி - தோளுக்குத் தெப்ப
மாகி. தலைப்பெயல் செம்புனல்-முதல் மழையால் வந்த சிவந்த
நீரில். தவநனி சிவந்தன-மிகவும் சிவந்தன. புனலாட்டற் கண்
சிவத்தல் : ?நீர்நீடாடிற் கண்ணுஞ் சிவக்கும்? (குறுந். 354 : 1) ;
அகநா. 278 : 7-11. 312 : 4-8. ( 10 ) (8)
புனலாட்டுப்பத்து முற்றிற்று.