எ-து முயக்கம்பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டை
யளவன்றி வண்டுகள் மொய்த்தனவாக, ?இதற்குக் காரணமென்??
என்று வினாவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
குறிப்பு. எருமை நல்லேற்றினம்-எருமைக்கடாவினங்கள். மேயல்-
மேய்ச்சல். அருந்தென-உண்டனவாக. பசுமோரோடம்-பசுமையான
செங்கருங்காலிப்பூ; மோரோடமென்பது மாரோடமெனவும் வழங்
கும்; குறிஞ்சி. 78; நற். 337 : 5; பெருங். 1-50 : 31. ஒல்லா-பொருந்
தா. வெறுக்கையவாகி- செறிவையுடையனவாகி. முச்சி-மயிர்முடி;
மலைபடு. 182. தலைவன் முயக்கத்தால் தலைவியின் கூந்தலில் வண்டு
கள் மொய்த்தல் : நற். 55.
(பி-ம்.) 1 ‘எருமைநல் லேறின் மேயல்?, 2 ‘மூச்சூயூதும்? ( 3 )