94

(10) எருமைப்பத்து

 


94. மள்ள ரன்ன 1தடங்கோட் டெருமை
 மகளி ரன்ன துணையொடு வதியும்
 நிழன்முதிரிலஞ்சிப் பழனத் ததுவே
 கழனித் தாமரை மலரும்
 கவின்பெறு சுடர்நுத றந்தை யூரே.

 எ-து வரைவிடை வைத்துப் பிரித்த தலைமகன் மீள்கின்றான்
சொல்லியது.

  (ப-ரை.) எருமை துணையொடு வதியுமென்றது வரைந்தெய்திய
வழித் தலைமகளோடு தானொழுகும் இன்பவொழுக்கத்தினை நினைந்து
கூறியவாறு. கழனித்தாமரை மலரும் என்றது அவ்விடத்துத் தன்னைக்
கண்டு மகிழ்வார் முகமலர்ச்சி கூறியவாறாம்.

 குறிப்பு. மள்ளர்-வீரா.் மள்ளரன்ன எருமை : நற். 260 : 1-3;
அகநா. 316. மள்ளரும் மகளிரும் : ஐங். 400 : 1-2. வதியும்-தங்கும்.
இலஞ்சி-மகிழ்; குளமுமாம். சுடர்நுதல் என்றது தலைவியை. ஊர்
பழனத்தது.

  (பி-ம்.) 1‘திறங்கோட் டெருமை? ( 4 )