எ-து உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப் பரத்தை
யிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி அவற்கு வாயிலாய் வந்தார்க்குத்
தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) எருமை கயிற்றைப் பரிந்துபோய் நாண்மேயலாருமென்
றது விலக்குவார்க்கு அடங்காது புறத்தொழுக்கம் விரும்புவான் எ-று.
குறிப்பு. பரிந்து-அறுத்து. அசைஇ-சென்று. நாண்மேயலாரும்-
விடியலிலே மேயும். ஊரன் எமக்கு நோயைச் செய்தனன். ( 5 )