எ-து பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த
தலைமகள் தலைமகன் மனைக்கண் புகுந்துழி உடன்படுதல்கண்ட
வாயில்கள் தம்முள்ளே சொல்லியது.
(ப-ரை.) எருமைஉழுது உழக்கிய அள்ளற்கண்ணே நெய்தலும்
ஆம்பலும் கலிக்கும் என்றது தலைமகற்கு வேண்டுவன புரிகின்ற இல்
வாழ்க்கைக் கண்ணே தாம்பெறுகின்ற சிறப்புக் கூறியவாறு.
குறிப்பு. அள்ளல்-சேற்றிகண். நெய்தல்-நெய்தற்பூ, கலிக்கும்-
செருக்கி வளரும், பாயல்-படுக்கை. பாயலில் இன்துணை ஆயினாள்.
(மேற்.) மு. வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது (தொல்.
கற்பு. 11, ந.)
(பி-ம்,) 1 ‘அணிநிற வெருமை? ( 6 )