25 பார்த்துற் றனதோழி பார்த்துற் றனதோழி 1யிரவெலா நற்றோழி பார்த்துற்றன வென்பவை தன்றுணை யில்லாள் வருந்தினாள் கொல்லென வின்றுணை யன்றி லிரவி னகவாலே யன்றுதா (1)னீர்த்த 2கரும்பணி வாடவென் (2) மென்றோண் ஞெகிழ்த்தான் றுறை எ - து: அது கேட்ட தலைவி பின்னும் பாடாமையின் தோழி, நம்மேல் அன்புற்றுப் புணர்ந்த அன்று தா (3) னெழுதிய கரும்பினது அழகு கெடும்படி மென்றோளை மெலிவித்தவனுடைய துறையிடத்து (4)இனிய துணையோடு கூடிய அன்றிலென்று சொல்லப்படுமவை, தன் துணையானவனை நீங்கினவள் வருந்தினாளோ என்று கருதி இராக்காலத்தும் அழைத்தனவில்லை ஆகையினாலே தோழீ! அவை நம்வருத்தத்தைப் பார்த்துத் தாமும்வருத்தமுற்றனபோலே இருந்தன; ஆதலால் நற்றோழீ! இரவெல்லாம் நம்வருத்தத்தைப் பார்த்துத் தாமவருத்தமுற்றன என்றாள். எ - று. (5) | 3பாத்துற்றன பாடமாயின், பிரிவுற்றனவென்க. | 31 | கரைகவர்கொடுங்கழிக் கண்கவர் புள்ளினந் திரையுறப் பொன்றிய புலவுமீ னல்லதை யிரையுயிர் செகுத்துண்ணாத் துறைவனை யாம்பாடு மசைவர லூசற்சீ ரழித்தொன்று பாடித்தை |
எ - து. அது கேட்ட தலைவி, கரையைபிடித்துத் தனக்காக்கிக்கொள்ளுகின்ற கொடுங்கழியிடத்து நோக்கினார்கண்ணை வாங்கிக்கொள்ளும்அழகையுடைய பறவைத்திரள் திரைமோதுகையினாலே இறந்த 4புலானாற்றத்தை யுடைய மீனை
1. ‘‘மென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்லன்’’ கலி. 143 : 34 - 32. 2. ‘‘மென்றோ ணெகிழ்த்தானை’’ கலி. 143 : 15. 3. இந்நூற்பக்கம் 382 : 5-ஆம் குறிப்புப் பார்க்க. 4. ‘‘அன்றிலம் பெடைகளையணுகி யன்னைகே, ணன்றென வினையின்மேனடந்த நாயக, ரின்றுவந் திடுவரிங் கெம்பொருட்டினா லொன்றுநீ யிரங்கலென் றுரைக்கின் றார்சிலர்’’ (கந்த. திருநாட்டு. 51.) என்பதும் இந்நூற்பக்கம் 801 : 3-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன. 5. பாதீடென்பதற்கு, ‘பகுத்துக்கொடுத்தல்’ என்று பொருள் கூறுமிடத்து, ‘ஈத்தலும் ஈதலும்போலப் பாத்தலும் பாதலுமொன்றாதலிற் பாதீடாயிற்று’ என்று (தொல். புறத். சூ. 3) இவ்வுரையாசிரியர் எழுதியிருப்பதை நோக்குக. (பிரதிபேதம்)1இரவெல்லாம், 2கரும்பினணி, 3பாத்தன பாடமாயின், 4புலாநாற்றத்தை.
|