பக்கம் எண் :

526கலித்தொகை

32 உதுக்காண், சாஅய் மலர்காட்டிச் சால்பிலான் யாமாடும்
(1) பாவைகொண் டோடி யுழி
34 உதுக்கா[ணந்](ண்), தொய்யில் பொறித்த வழி
35 உதுக்காண், தையா றேறெனத் தேற்றி யறனில்லான்
பைய முயங்கி யுழி
37 அளியவென் னுள்ளத் தூயவுத்தே ரூர்ந்து
விளியாநோய் செய்திறந்த வன்பி லவனைத்
தெளிய விசும்பினு ஞாலத் தகத்தும்
வளியே யெதிர்போம் பலகதிர் ஞாயிற்
றொளியுள் வழியெல்லாஞ் சென்று முனிபெம்மை
யுண்மை நலனுண் டொளித்தானைக் காட்டீமோ
காட்டாயேன், மண்ணக மெல்லா மொருங்கு சுடுவேனென்
கண்ணீ ரழலாற் றெளித்து
45 பேணான், துறந்தானை நாடு மிடம்விடா யாயிற்
(2) பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப்

நெய்த, னெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்த, லோரை மகளிர்” குறுந். 401. (அஅ) “அடும்புகொடி துமிய வாழி போழ்ந்தவர், நெடுந்தே ரின்னொலி யிரவுந் தோன்றா” நற். 338 : 2 - 3 (ஆஆ) “படிவ மகளிர் கொடிகொய் தழித்த, பொம்ம லடும்பின்” நற். 272: 2 - 3. என்பவற்றால் அறியலாகும். குந்தாணியென்று வழங்கும் கொடிக்கு இங்கே கூறிய இயல்புகளெல்லாம் இருத்தலால் இஃது அக்கொடி போலும்; அதிற் செம்பூவும் காணப்படுகிறது. (இஇ) “சுள்ளி சுனை நீலஞ் சோபா லிகைசெயலை, யள்ளி யளகத்தின் மேலாய்ந்து” (திணைமாலை. 2) என்புழி, சோபாலிகை யென்பதற்கு, அடுப்பலர் என்று கையெழுத்துப் பிரதிகளிற் பொருள் காணப்படுதலால், சோபாலிகையென்பதும் இதன் பெயரேயாம். இதற்கு அடுப்பென்று காணப்படும் பொருள் தவறென்று தோற்றுகிறது.

1. (அ) “வரிப்பந்து கொண்டொளித்தாய்” பு - வெ. பாடாண். 50. (ஆ) “முற்றிலைப் பந்தைக் கழங்கைக்கொண் டோடினை” திருவேங்கடத்தந்தாதி. 97. என வருபவை இதுபோல்வன.

2. கலக்கமென்பது சொல்லத்தகாதன சொல்லுதலென்று கூறி அதற்கு, “பிறங்கிரு முந்நீர்..................யாகலுமுண்டு” என்பதனை (தொல். மெய்ப். சூ. 22) மேற்கோள்காட்டினர் பேராசிரியரும்; (இ - வி. சூ. 580)