பக்கம் எண் :

மூன்றாவது மருதம்527

10(1) இஃதொத்தன், (2) புள்ளிக் (3) களவன் புனல்சேர்பொதுக்கம் போல்
(4) வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு
மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு (5) நல்லார்
சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
தவறாதல் 1சாலாவோ கூறு 

எ - து: அதுகேட்ட தலைவி இவனொருத்தனென நெஞ்சொடு வியந்து கூறி, பின்னர், புள்ளியையுடைய (6) நண்டுகளின் நடையாலுண்டான வடு நீரருகைச் சேர்ந்து கிடந்தாற்போலப் பெரிய உகிராற் பிறந்த வடுக்களும் ஒளியையுடைய எயிறு அழுந்தின வடுக்களும் ஒள்ளிய இதழ்கள் வாடின நின் கண்ணியும் பரத்தையர் நின்னோடு வேறாகிக் கோபித்து அடிக்கச் சிவந்த நின்னுடைய மார்பும் தப்பாதலுக்கு அமையாவோ ? அமையாவாயிற் கூறு என்றாள். எ - று.

சேர்பென்னும் எச்சத்திற்கு வினை வருவித்து முடிக்க. ஒதுக்கமென்னுந் தொழிற்பெயர் ஆகுபெயர். "சிரறுசே லாடிய நீர் வாய்ப்பதத்த" (7) என்றாற்


தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று' எனத் தலைவன்பணிந்து கூறியது காண்க" என்பர்; தொல். கற்பி. சூ. 17. 'காமக்கடப்பின்'. 

1. இந்நூற்பக்கம் 386 : 3-ஆம் குறிப்புப்பார்க்க.

2. (அ) பொறியலவன் (சிலப். 7 : 31. முதற்பதிப்பு) என்பதற்கு, 'புள்ளிக் கள்வன்' என்பது  மேற்கோள்; (ஆ) "புள்ளிக்கள்வன்" ஐங். 21, 22, 24.

3. (அ) "களவன் மண்ணளைச் செறிய வகல்வயற், கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ" அகம். 235: 11-12.(ஆ) "அலவ னள்ளி குளிர்ஞெண் டார்மதி, களவ னென்றிவை கற்கடகப் பெயரே" சேந்தன் றிவாகரம். (இ) "களவன் குளிர்ஞெண்டு கற்கடம்" உரிச். சொனிகண்டு. 90. என்பவற்றால் நண்டிற்குக் களவனென்னும் பெயரும் பயின்று வருதலறிக.

4. கலி. 67: 14 - 15; அடியும், 72. 11 - 12; அடியும், குறிப்பும் பார்க்க. 

5. "ஊடிக், கொதித்து மேற்றிசை யணங்கலத் தகப்பதங் கொடுமே, லுதைத்த தாமெனச் சிவந்தது வெய்யவ னுடலம்" நைடத. மாலை. 21.

6. "செய்ச்சேத கத்திற் குளிர்நடந் தாங்குச் செறிந்த வடு, மெய்ச்சே யிழைக்கொடி யன்னார்   கடைத்தலை மேயினதால்." திருவெங்கைக்கோவை. 381.

7. "சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தல்" என்பது பதிற். 22: 13.

(பிரதிபேதம்) 1. சாலாதோ.