பக்கம் எண் :

526கலித்தொகை

5 (1)கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று

 எ - து : அதுகேட்டுக் கடியராயிருப்பார்தமக்கு மாற்றஞ்சொல்லத் தக்கவர் யாவரென்றான். எ - று.

1வினைக்கெட்டு, (2)வாயல்லா வெண்மை யுரையாது 2கூறுநின் 
மாய மருள்வா ரகத்து. 

எ - து : அதுகேட்டு நீ போகின்ற தொழிலைத் 3தவிர்த்துநின்று உண்மையல்லாத வெண்மைகளைச் சொல்லாதே நின் பொய்ம்மைகளை மெய்யென்று மயங்குவாரிடத்தே 4சொல்லென்றாள். எ - று.

'வினைக்கேட்டு' பாடமாயின் வினைக்கேடாகிய வாயல்லாவென்க. உரையாதியும் பாடம். வெண்மை, பண்புப்பெயர். 

8

ஆயிழாய், நின் (3) கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா 
வென்க ணெவனோ தவறு.

 எ - து : அதுகேட்ட தலைவன், ஆராய்ந்த இழையினையுடையாய் ! நின்னுடைய 5கண்ணினில் (4) அருணோக்கினைப் பெறிலன்றி இனிய உயிர் வாழமாட்டாத என்னிடத்துத் தப்பு யாதுதானென்றான். எ - று. 

"காமக் கடப்பினுட் பணிந்த கிளவி, 'காணுங் காலைக் 6கிழவோற்குரித்தே" (5)என்பதனால், தலைவன் பணிந்து கூறினான்.


1. "கடியர் தமக்கு................மாற்று" என்பது உரைவகைநடை நான்கனுள், பாட்டிடை வைத்த குறிப்பிற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 165. 'பாட்டிடை' இளம். 

2. பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளுள் தலைவன்கூற்றைத் தலைவி பொய்யாக் கோடற்கு, "வாயல்லா வெண்மை.....,ரகத்து" என்பது மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 22. 'இன்பத்தை' இளம். 

3. கண்ணென்பது அருளென்னும் பொருளில் வருதலை, "கண்மாறிவிடின்" கலி. 61 : 24; என்பதனாலும் அதன்குறிப்பாலும் அறிக. 

4. "நின், னருணோக்க மழியினு மவலங்கொண் டழிபவள்" கலி. 10: 18-19. 

5. தொல். கற்பி. சூ. 19. (அ) இச்சூத்திரத்தின் இவருரையிலும் தலைவன் தலைவி மாட்டுக் காமங் கையிகந்துழித் தாழ்ந்து கூறியதற்கு, "கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார்மாற்று" என்பதும் "ஆயிழாய் நின்கண் ...............தவறு" என்பதும் மேற்கோள். (ஆ) இளம்பூரணரும், "பெரியார்க் கடியரோ வாற்றாதவரெனத் 
தலைவி கூறியவழி 'கடியர்

(பிரதிபேதம்) 1. வினைகெட்டு. 2. சென்றீநின், 3. தவிர்ந்துநின்று, 4. செல்லென்றாள், 5. கண்ணில் வருநோக்கினைப், 6. கிழவோர்க்கு