பக்கம் எண் :

790கலித்தொகை

தென்னு, 1மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை” என்னும் (1) சூத்திரத்து என்ப 2தன்றதற்கு உதாரணமாகக்காட்டினாம்; அதனானுணர்க. ஏனையவும் இவ்வாறேகொள்க.

10

(2) குறியின்றிப் பன்னாணின் கடுந்திண்டேர் வருபதங்கண்
டெறிதிரை யிமிழ்கான லெதிர்கொண்டா ளென்பதோ
வறிவஞ ருழந்தேங்கி (3) யாய்நலம் வறிதாகச்
செறி (4) வளை தோளூர விவளைநீ துறந்ததை

எ - து: தன்னறிவு வருத்தத்தே அழுந்தி அழுது ஆராய்ந்தநலம் சிறிதாகையினாலே முன்புசெறிந்தவளைதோளினின் றுங்கழன்றுவிழும்படி இவளை நீ துறந்தது, எறிகின்றதிரை யொலிக்கின்ற கடற்கரையிலே நின்னுடைய கடியதாகிய தேர் இன்ன காலத்தே வருமென்னுங்குறிப்பின்றிப் பலநாளும் வருங்காலத்தை (5) மனத்தாலே நோக்கி எதிர்கொண்டாளென்பதோ? எ - று.

திரையொலியால், தேரொலி கேட்டற்கு அரிதாகவும் அவ்வொலிகேட்டு எதிர்கொண்டாளென்றாள்.

14

காண்வர வியன்றவிக் கவின்பெறு பனித்துறை
யாமத்து வந்துநின் குறிவாய்த்தா ளென்பதோ


1. தொல். இடை. சூ. 32. இச்சூத்திரத்தின் இவருரையிலும் ‘என்பது’ என்றது என்றுசொல்லப்படுவதென்னும் பொருள்தந்து நில்லாது வாய்த்தாள், எதிர்கொண்டாள் என்னுஞ்சொற்கள் உணர்த்திய செய்ந்நன்றியைத் தானும் உணர்த்தி நின்றதென்பதற்கு “நடுங்குநோய்.....துறந்ததை” “எறிதிரை......துறந்ததை” என்னும் பகுதிகள் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன.

2. களவொழுக்கத்துத் தேரேறிச்சென்று தலைவர்கூடுதற்கு, “குறியின்றி .........தோளூர விவளைநீ துறந்ததை” என்னும் பகுதி மேற்கோள்; தொல். பொருளி. சூ. 18. நச்.

3. “மென்றோண் ஞெகிழவுந் திருநுதல் பசப்பவும், பொன்போல் விறற் கவின் றொலைத்த, குன்ற நாடற்கு” ஐங். 230.

4. வளையென்றது தொடியை; அது முன் ‘செறி’ என அடைகொடுத்தலானும் பின் ‘தோள்’ என இடங்குறித்தலானும் துணியப்படும். தொடி, வளையென்றும் வழங்கப்படுதற்கு, குறள். 1234, 1235. பரிமேலழகருரையும் சான்று பகரும் ‘முன் வளைகழல நின்றார்க்கு வருத்தமிகுதியால் தொடியுங் கழன்றன வென்க’ (சீவக. 469. விசேடவுரை) என்பதும் இங்கே அறிதற்பாலது.

5. இந்நூற்பக்கம் 784 : 3 - ஆம் குறிப்புப்பார்க்க.

(பிரதிபேதம்) 1ஆவியன் மூன்றும், 2என்பதற்குக் காரணமாகக் காட்டினாம்.