எ - து : தோள்வலியாலே துணிந்த ஏறுதழுவுதல் எக்காலமும் மனத்தைச் செலுத்துதலின் அம்மனம் பிணித்த முயற்சியாலே எழுந்து துணிந்த இசை தவிர்தலன்றி அதனிடத்தே சென்று மற்றுள்ளார் தழுவுமாற்றைக் கடந்து சேர்ந்து மெய்யைத்தழுவித் தான்கொள்ளும் நிலையைத்தப்பித்தன் முன்னே வீழ்ந்தவன்மேலே செல்லாமல் 1மீளுகின்ற புகர் நிறத்தையுடைய ஏற்றினது தோற்றரவு, மிக்குச்செல்லும் போருள் தன்கையில் வாளோடே அகப்பட்டவனை எனக்கு ஒவ்வானென்று வெட்டாமல் மீளும், கூற்றுவனை யொத்த மறவனையும் ஒக்கும்; இதனைப் பாராயென்றாள். எ - று. 51 | ஆங்க, செறுத்தறுத் துழக்கி 2யேறெதிர் நிற்ப மறுத்து மறுத்து மைந்தர் சாரத் தடிகுறை யிறுபிறுபு தாயின கிடப்ப விடியுற ழிசையி னியமெழுந் தார்ப்பப் | 55 | பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமே லூர்பவர் 3கோடிடை நுழைபவர் கோட்சாற்று பவரொடு புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க (1) வரிபுனை (2) வல்வி லைவ ரட்ட பொருகளம் போலுந் தொழூஉ |
எ - து : அங்ஙனம் கொம்பு மார்பிற்படுதலை மார்புகொடுத்து ஏற்றுக் கொள்பவரோடும் மேலே பாய்ந்து 4ஏறுபவரோடும்கோட்டிடையிலே சென்று புகுவாரோடும் ஏறுகொள்ள வல்லேனென்று சாற்றுவாரோடும் ஏறுகள் பொருது பின்பு பொருவாரை அறுத்துச் செறுத்து எதிரேநிற்க அதனைப் பொறாமல் மைந்தர் விலக்குமவரை 5மறுத்துமறுத்துச் சென்று தழுவுகையினாலே என்புகள் முறிந்து முறிந்து தசைகளற்றுப் பரந்தனவாய்க் கிடக்க (3) இடியோடே மாறுபடுகின்ற ஏற்றினது முழக்கோடே வாச்சியங்கள் மிக்கு ஆரவாரிக்க அத்தொழு, போரைவிரும்பி மேலேசென்ற துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன் முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும். எ - று.
1. ''வரிப்புனை பந்தொடு'' முருகு. 68. 2. (அ) ''வல்வி லோரி கொல்லிக் குடவரை'' குறுந். 100. (ஆ) ''கொல்லி யாண்ட வல்வி லோரியும்'' புறம் 158. 5. (இ) ''வல்வி லிராமன்'' நாலா. பெரியதிருமொழி. (5) 1 : 4. 3. ''உருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு'' (கலி. 113 : 26 - 27.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1மீளுகின்ற நிறத்தை, 2ஏற்றெதிர், 3கோட்டிடை, 4ஏறுமவரோடு, 5மறுத்துச் சென்று.
|