பக்கம் எண் :

நான்காவது முல்லை699

35
(1)
(2)


(4)
(7)
வெண்ணெய்த் 1தெழிகேட்கு மண்மையாற் சேய்த்தன்றி
யண்ணணித் தூராயி னன்பகற் 2போழ்தாயிற்
கண்ணோக் கொழிக்குங் கவின்பெறு பெண்ணீர்மை
மயிலெருத்து வண்ணத்து மாயோய்மற் றின்ன
வெயிலொ டெவன்விரைந்து சேறி (3)யுதுக்காண்
3பிடிதுஞ்சு வன்ன வறைமேல நுங்கின்
றடிகண் புரையுங் (5)குறுஞ்சுனை யாடிப்
பனிப்பூந் (9)தளவொடு முல்லை பறித்துத்
தனிக்காயாந் தண்பொழி லெம்மொடு வைகிப்
பனிப்படச் செல்வாய்நும் மூர்க்கு

1. “இப்புனத்தின், மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான் கலையே” (கோவையார். 53.) என்பதன் உரையில், ‘மருங்கென்பது மருங்கணென ஈறுதிரிந்துநின்றது. அணித்தாகவென்னும் பொருட்டாய அணி, அண்ணெனக் குறைந்து நின்ற தெனினு மமையும்’ எனப் பேராசிரியர் எழுதியிருப்பதும் தொல்காப்பியவுரையில் அண்ணணி யென்பது அடையடுத்ததென்று நச்சினார்க்கினியரெழுதியிருத்தலும் இங்கே அறியத்தக்கன.

2. (அ) "கண்கவர் காரிகை”................... (ஆ) "கண்டவர் மனமுங் கண்ணுங் கவர்ந்திட வனப்பு வாய்ந்த வொண்டொடி” நைடத. போர்புரி. 5. என்பவையும் (இ) ”வாங்கெழி னல்லாரும்” (கலி. 104 : 61.) என்பதற்கு, ‘நோக்கினார் கண்ணை வாங்கிக் கொள்ளும் அழகினையுடைய ஆய்ச்சியரும்’ என்றெழுதியிருக்கு முரையும் இங்கே நோக்கற்பாலன.

3. “உதுக்காண்” என்பது சுட்டு முதல் உகர ஈறாகிய சொல்லின்முன் வல்லெழுத்து மிக்கு வந்ததற்கு மேற்கோள்; தொல். உயிர். சூ. 621. நச். குறுந். 161; ஐங்குறு. 101, 453 ; புறம். 307. 3.

4. “சுரும்புணக் களித்த புகர்முக வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉநின், குன்று” ஐங்குறுநூறு. 239.

5. “குறுஞ்சுனைப் புறவம்” காஞ்சி. திருநாட்டுப். 64.

6. “பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை”

7. (அ) ”தண்டுளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலை திறந்த, நாற்றம் புதன்மிசைப், பூமலர் தளவமொடு தேங்கமழ்பு கஞல” (ஆ) ”முல்லை, போதவிழ் தளவமொடு” (இ) ”நெடுங்கொடி முல்லையொடு தளவமல ருதிர” (ஈ) ”கல்லேர் புறவிற் கவினிப் புதன்மிசை, முல்லை தளவொடு போதவிழ” (உ) ”வெருகு வேட்பச் சிரிப்பனபோன்

(பிரதிபேதம்)1தொழில்கேட்கு, 2பொழுதாயின், 3பிடித்துஞ்சு வன்னவறைமேனுங்கின்.