பக்கம் எண் :

912கலித்தொகை

மறைந்ததனைக்கண்டு, நீ மதியோடே வெண்மேகத்தே ஓடிச் சென்று புகாநின்றாய்; ஆகையினாலே சிறிதென்னைக் கண்ணோட்டஞ் செய்து நீ என்னைத் தேடிப்போகின்றாய்போலே இராநின்றாயென்று கூறினாள். எ - று.

 

27நீடிலைத் தாழைத் (1) துவர்மணற் கானலு
ளோடுவே னோடி யொளிப்பேன் பொழிறொறு
நாடுவேன் கள்வன் கரந்திருக்கற் பாலன்கொ
லாய்பூ (2) 1வடும்பி னலர்கொண் டுதுக்காணெங்
கோதை புனைந்த வழி

1. “துவர்மணல்” என்ற தொடர் (கலி. 32. 2) வந்துள்ளது.

2. அடும்பென்பது அடம்பென்றும் சிலவிடத்து வழங்கப்படுகிறது; இது நெய்தனிலத்துக்கு உரியதொரு வார்கொடி; இக்கொடியிற் செந்நிறமுடையதும் கருநிறமுடையது முள; இதன் இலை கவடுடைமையால் அதற்கு மானடி உவமையாகக் கூறப்படுகிறது. இதன் பூ வெண்ணிறமுடையதென்று செய்யுளால் அறியப்படுகிறது. அப்பூவுக்குத் தார்மணியும் கொட்டகமும் உவமையாக்கப்பட்டுள்ளன. இதனை மகளிர்கொழுதி விளையாடுவதும் வேறு மலரொடு விரவக்கட்டிச் சூடுவது முண்டு. இதன்கொடியைத்தலைவன் தேருருளை துணிப்பதாகக்கூறுவது பெருவழக்கு; இவையும் பிறவும் (அ) “கருங்கொடி யடம்பு” கல். 19 : 14 (ஆ) “ஓங்குதிரை விரைபுதன், கரையம லடும்பளித்தாஅங்கு” (இ) “அடும்பிவ ரணியெக்கர்” கலி. 127, 20 - 21, 132 : 16 (ஈ) "அடும்பாரணி கானற் சேர்ப்ப" (உ) "எக்க, ரடும்பலருஞ் சேர்ப்ப" பழ. 194, 202. (ஊ) "முதுநீ ரடைகரை, யொண்பன் மலர கவட்டிலை யடும்பின், செங்கேழ் மென்கொடி யாழியறுப்ப, வினமணிப் புரவி நெடுந்தேர் கடைஇ" அகம். 80 : 7 - 10. 
(எ) "ஏர்கொடிப் பாசடும்பு" ஐங். 101. (ஏ) “ஆய்கொடிப் பாசடும்பு” அகம். 330 : 14. (ஐ) “கான லடம்பின் கவட்டிலைகண் - மானின், குளம்பேய்க்கு நன்னாடன்” நள. கலிதொடர். 88. (ஒ) “மானடியன்ன கவட்டிலையடும்பின், றார்மணி யன்ன வெண்பூக் கொழுதி, யொண்டொடி மகளிர் வண்ட லயரும்” குறுந். 243. (ஓ) “கொட்டக மலர்ந்த கொழுங்கொடி யடும்பி, னற்றுறை யணிநீர்ச் சேர்ப்ப” தொல். அகத். சூ. 24. இளம். மேற். (ஒள) “இருங்கழி பொருத வீர வெண்மணன், மாக்கொடி யடும்பின் மாயித ழலரி, கூந்தன் மகளிர் கோதைக் கூட்டுங், காமர் கொண்கன்” நற். 145 : 1 - 4. (ஃ) “அடும்பி னாய்மலர் விரைஇ

(பிரதிபேதம்)1அடம்பின்.