பக்கம் எண் :

412கலித்தொகை

தஞ்செவிகள் (1) செய்யாக, முன்னுள்ள சான்றோர் கூறிய செய்யுட்கள் தஞ்சொல்லை வளர்க்கும் நீராக, அறிவினையுடைய நாவாகிய ஏராலே உழுதுண்ணும் புலவருடைய புதிய கவிகளைக் கொள்ளைகொண்டு உண்ணும் மதில் சூழ்ந்த புனலை யுடைத்தாகிய மதுரையையுடையவனே; எ - று.

இதுவும் பாட்டுடைத்தலைவனைக் கிளவித்தலைவனாகக் கூறியது.

6 ஊரன்மன் னுரனல்ல 1னமக்கென்ன வுடன்வாளா
தோரூர்தொக் கிருந்தநின் பெண்டிரு ணேராகிக்
களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை
வளையின் (2) வாய் விடன்மாலை மகளிரை நோவேமோ
கேளல னமக்கவன் குறகன்மி னெனமற்றெந்
தோளொடு பகைபட்டு 2நினைவாடு நெஞ்சத்தேம்

எ - து; நமக்கு ஊரன் மிகவும் பற்றுக்கோடல்லனெனச் சொல்லிப் பின்னர் ஒருவர்கூறியது ஒருவர்கூறாதே ஓரூர் குடியேற்றவேண்டுவாராய்த் திரண்டிருந்த நின் சேரிப்பரத்தையருடனே யாங்களும் ஒப்பாகி, நமக்கு 3அவன் உறவல்லன் அவனை முயங்காதேகொள்ளுங்கோளெனச் 4சொல்லி முயங்கக்கருதின எந்தோள்களுடனே மாறுபட்டுப் பின்னை முயங்கக்கருதின


நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னா, லறிந்தவை யமர்ந்து செய்யுமமைதியா னரச னாவான், செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி, யறிந்தவை யியற்றுகிற்கு மமைதியா ரமைச்ச ராவார்" சூளா. மந்திரசாலை. 9. (எ) "தம்முயிர்க்குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்; வெம்மையைத் தாங்கி நீதிவிடாதுநின் றுரைக்கு மெய்யர்" கம்ப. அயோத்தி. மந்திரப். 9 (ஏ) "மன்னவர் செவியழன் மடுத்த தாமென, நன்னெறி தருவதோர் நடுவுநீதியைச், சொன்னவ ரமைச்சர்கள்" கந்த................... (ஐ) "மதிநுட்பரு மாகிச் சோர்வில், சொல்லா லடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப், பல்லார் பிறர்சொற் பயனாய்ந்து கவர வல்லார்" திருவிளை. பன்றிக் குட்டிகளை. 14. (ஒ) "செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி, வெகுளினும் வாய்வெரீஇப் பேரா...........................யமைச்சு "நீதிநெறி. 45. (ஓ) "சுருக்கிமெய் விளக்கி யினிமையும் பயனுந் தொகுத்தய லார்மொழிக் கிடையாத், திருக்கிளர் மொழியைச் சோர்வற வவைக்கட் செல்லுமா றஞ்சுத லின்றி யுரைக்கவல் லவரே யமைச்சர்க ளாவர்" விநாயக. அரசியற்கை. 106.

1. "பன்றி நாட்டார் செறுவைச் செய்யென்று வழங்குவர்" நன். பெயரி. சூ. 16. மயிலை.

2. "வாய்விடூஉந் தானென்ப" கலி. 46 : 15.

(பிரதிபேதம்) 1எமக்கென்னவுடன் வாராது, 2நினைவாகு, 3இவனுறவல்லன்.4சொல்லமுயங்க.