முன்னே ஆரவாரமெழப் புகையொடு துகள் எழ ஏறுதழுவினார்க்குக் கொடுத்தற்கு நல்லமகளிர் திரண்டுநிற்ப 1நீர்த்துறையிலும் (1) ஆலமரத்தின்கீழும் பழையவலியினையுடையமராமரத்தின்கீழும் உறையுந்தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித் தொழுவிலே பாய்ந்தார். எ - று. "வளிவழக் கறுத்த வங்கம்" (2) என்றாற்போல வழக்குப் போக்குதன் மேல்நின்றது. (3) இடி ஏற்றின் இடிப்பிற்கு உவமம். அவர்பாய்ந்த அளவிலே தோழி தலைவியை அழைத்துக்காட்டுகின்றாளாக மேற்கூறுக. 15 | மேற்பாட் டுலண்டி னிறனொக்கும் புன்குருக்க ணோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் றோற்றங்கா ணஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியா (4) னெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் |
எ - து: உயர்ந்த கொம்பிடத்தே வைத்த (5) உலண்டினது நிறத்தை யொக்கும் புல்லியநிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக்காணாய்; அழகிய
வேறு பெயரோ, யெவ்வயி னோயு நீயே" பரி 4 : 67 - 70. (இ) "துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்" சிலப். 24. 'குறமகள்' 1. (அ) "ஆலுங் கடம்பு மணிமார் விலங்கிட்ட" கலி. 106 : 26. (ஆ) "கடவுளாலத்து" நற். 343 : 4; புறம். 199 : 1. 2. புறம். 368 : 9. 3. "உருமி னதிருங் குரல்போற் பொருமுர, ணல்லேறு" கலி. 113 : 24 - 25. என்பதும் அதன் குறிப்பும் இங்கே நோக்கற் பாலன. 4. "நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன், வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்" என்பது 'இட்டு' என்னு மிடைச்சொல் அசைநிலையாய் வருதற்கு மேற்கோள். நன். இடை. சூ. 22. மயிலை; விருத்தி; இரா. இ - வி. சூ. 277. 5. உலண்டென்பது தான் வெளிப்படுதற்கு வழியின்றித் தன்னுடம்பைத் தானூற்கு நூலாற் சுற்றிக் கூடாக்கிக் கொண்டு அதனுளிருந்திறக்கும் இயற்கையையுடையதொரு புழு; அந்நூலியற்ற அதுவே வல்லது. அது காட்டிலமிர்தென்று சிறப்பிக்கப்படுவது; அதனூலால் சிறந்த ஆடை நெய்தலுண்டு; இவை (அ) "வரியுடல் சூழக்குடம்பை நூ றெற்றிப்போக்குவழி படையா துள்ளுயிர் விடுத்தலி, னறிவு புறம் போய வுலண்டது போல" (ஆ) "போக்குவழி கண்டிடை (பிரதிபேதம்)1நீர்த்துறையும் ஆலத்தின் கீழும்.
|