பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி337

(1) வல்லவன் றைஇய பாவைகொ (2) னல்லா
ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்


1. "உலக மூன்றினு ணல்லெழி லொருங்கெடுத் தினிதின், மலரின்மேலையோன் மனத்தினால் வகுத்தவோ வியங்கொல், சிலைகொள் வேனில் வே ளினியதெள் ளமுதினிற் றீட்டி, நலநிறைந்தபூங் கொடி கொன்மற் றெனவுள நயந்தான்" காசி.கங்காளகேது. 11.

2. (அ) "நல்லார்கணல் லவ்வுறுப் பாயின தாங்க ணாங்க, ளெல்லாமுட னாதுமென் றன்ன வியைந்த வீட்டாற்,
சொல்வாய்முகங் கண்முலை தோளிடை யல்குல் கைகால், பல்வார்குழ லென்றிவற் றாற்படிச் சந்தமானாள்"
(தொல். உவம, சூ. 24. 'உவமப்' இளம். மேற்கோள்) (ஆ) "அருங்கல மகளிர்க் கேற்ற வழகெலாந் தொகுத்து மற்றோ, ரிருங்கலி யுலகங் காணப் படைத்தவ னியற்றினான்கொ, லொருங்கலர்ந்துலகின் மிக்க மகளிர துருவ மெல்லாம், பெருங்கல வல்கு றன்பாற் புகுந்துகொல் பெயர்ந்த தென்றான்" (சூளா. கல்யாண. 161) என்பவைகளும்: (இ) "காயுமனைத்துநீர், யாருள்ளி நோக்கினீ ரென்று" (குறள் 1320:,) என்புழி 'என் அவயவமனைத்தும்நோக்கினீர், அவற்ற தொப்புமையான் எம்மகளிரைநினைந்து என்று சொல்லி வெகுளா நிற்கும்' எனப் பொருளும் 'யான் எல்லா அவயவங்களாலும் ஒருத்தியோடொத்தல் கூடாமையின் ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்கவேண்டும். அவரெல்லாரையும் யானறியச் சொல்லுமின்‘ என்னுங் கருத்தால் "அனைத்து நோக்கினிர் யாருள்ளி" என்றாள். என விசேடவுரையும் எழுதியிருத்தலும் (ஈ) "கரும்பேதேனே" (சீவக, 2453) என்புழி, தேனென்பதற்கு, 'நல்லாருறுப்பெல்லாங் கொண்டியற்றலிற்றேன்' என்று விசேடவுரை எழுதியிருத்தலும் (உ) "ஆரிடைச் சென்றுங் கொள்ளவொண்கிலா வழகுகொண்டாள்" (ஊ) "இழைகுலா முலையினாளை யிடையுவா மதியி னோக்கி, மழைகுலா வோதி நல்லார் களிமயக் குற்று நின்றா, ருழைகுலா நயனத் தார்மாட் டொன் றொன்றேவிரும்பற் கொத்த, தழகெலா மொருங்கேகண்டால் யாவரே யாற்ற வல்லார்" (எ) "பெண்களா னார்க்கு நல்ல வுறுப்பெலாம் பெருக்கினீட்ட, வெண்களால ளவாமானக் குணந்தொகுத்தியற்றினாளை" கம்ப. நீர்விளையாட்டுப். 17. கோலங்காண் 20; மாயாசனக. 5;
(ஏ) "திருவு மாரவே ளிரதியுந் திலோத்தமை யென்ன, மருவு தையலு மோகினியென்பதோர் மாது, மொருதனித் திருவடிவுகொண்டாலென வுலகிற், பொருவின் மாயவள் பேரழ குருக்கொடு போனாள்" கந்த. மாயைப். 13. (ஐ) "உருவெழில் வனப்புவாய்ந்த வொருத்தியைத் தருவா