பக்கம் எண் :

338கலித்தொகை

(1) வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார்
கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்

னெண்ணிப், பெருகிய வுலகின் மாந்தர் பிறங்கெழில் வேறு வேறு, மருவிய வழகிற் காமர் மலிந்தன திலத்தின் வாங்கித், திருவினு முருவ மிக்குத் திகழ்தரச் சிறப்பிற்செய்தான்" வேதாரண்ய. பிரமதீர்த்த. 3. என்பவைகளும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.

1. (அ) "பண்டறியேன் கூற்றென்பதனை யினியறிந்தேன், பெண்டகையாற் பேரமர்க் கட்டு" (குறள். 1083) என்பதும் அதன் பரிமேல், உரையும் (ஆ) "மன்னவன் செங்கோன் மறுத்த லஞ்சிப், பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்ற, மாண்மையிற் றிரிந்துதன் னருந்தொழி றிரியாது, நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப், பண்மொழி நரம்பிற் றிவவியாழ் மிழற்றிப், பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென" (இ) "வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின்மலர்கையேந்தி, விலைமீனுணக்கற் பொருட்டாக வேண்டுருவங் கொண்டுவேறோர், கொலைவேனெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வ, தலைநீர்த்தண் கான லறியே னறிவேனே லடையேன் மன்னோ" (சிலப். 5 : 218-23, 7 : 10) (ஈ) "கன்னி [நீர்] ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட, பொன்னங் கொடியை யீன்றோ ரில்லை போலுமான், மன்னன் காக்கு மண்மேற் கூற்றம் வரவஞ்சி, யின்ன தொன்று படைத்த தாயி னெவன் செய்கோ" (தொல்.செய்யுளி. சூ. 155 : பே. மேற்கோள்) (உ) "கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்தது, போமினும் முயிருயக் கொண்டு" (சீவக. 2451) (ஊ) "வண்ண மேகலைத் தேரொன்று வாணெடுங், கண்ணிரண்டு கதிர்முலை தாமிரண், டுண்ணி வந்த நகையுமுண் டாமெனி, லெண்ணுங் கூற்றினுக் கித்தனை வேண்டுமோ" கம்ப. மிதிலைக்காட்சி. 144. (எ) "பெண்ணோ வலளல்லள் பெண்ணுருவு கொண்டிருந்து, மண்ணோர் களையெல்லா மாய்க்க வருங்கூற்றே" இராமா. திக்குவிசயப். 176. (ஏ) "வெண்ணிலாக் கதிர்கள் விழுதுவிட் டொழுகும் பிறைவடஞ் சுமந்தற வீங்கி, வண்ணமென் சுணங்கு பூத்ெ்தழுந் தோங்கும் வனமுலைப் பொறையினி வந்தோ, நுண்ணிடை முரியு முரியுமென் றேங்கி நூபுர மரற்றவெங் கூற்றம், பெண்ணுருக் கொண்டு வருதல்போற் பெட்பின் மேனகை யவ்வுழிப் பேர்ந்தாள்" கூர்ம. இராமனவதரித்த. 96. (ஐ) "பெண்ணுருக் கொடுயிர்களைப் பெட்பொடு, முண்ணக் கூற்ற மொளியிட் டுறைந்ததே" காசி. காசிப்படங். 27. என்பனவும் ஒப்புநோக்குக. (ஒ) உருபென்பதன்றி உருவென்பதே வடிவை யுணர்த்திவருமென்பதற்கு, "வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல்" என்பது மேற்கோள்; தொல். கிளவி.
சூ. 24. நச்.