பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி387

எ - து: இவனொருத்தன் தன்னாற் றோற்றப்பொலிவு எய்தினேமெனக் கூறுகின்ற கூற்றைப் பாராயென நெஞ்சொடு 1கூறி, நீ என் றோண்மேற் றொய்யிலெழுதிக் கனவுபோல ஓரொருகாற் றங்கின நிலையாலுண்டான 2தோற்றப்பொலிவு உண்டாவேம்;அதுவன்றிஎம்(1) முலையால்நின்மார்பிடத்து இடைவிடாது உழுத நல் 3வினையை உடையேமோ ? அஃதின்றே ; எ - று.

ஏஎ, இகழ்ச்சிக்குறிப்பு.

4இது தொய்யிலெழுதி முடித்ததனாலுண்டான பொன்கடவேம்; அதுவன்றி நின்கீழ் உழுத நிலைமையையுடையேமோவென ஒரு நகைக் குறிப்புத் 5தோன்றநின்றது.

11உழுதாய்;
சுரும்பிமிர் பூங்கோதை யந்நல்லா யானின்
(2) றிருந்திழை மென்றோ ளிழைத்தமற் றிஃதோ
கரும்பெல்லா நின்னுழ வன்றோ வொருங்கே
துகளறு வாண்முக மொப்ப மலர்ந்த
குவளையு நின்னுழ வன்றோ விகலி
முகைமாறு கொள்ளு மெயிற்றா யிவையல்ல
வென்னுழுவாய் நீமற் றினி

எ - து: சுரும்புகள் ஒலிக்கின்றன பூவாற்செய்த கோதையினையுடைய அழகினையுடைய நல்லாய்! நீ 6உழுதாய்; பின்னைஇக்களவொழுக்கத்திலும் இந்தத்


ஈறுதிரிந்த தென்று கல்லாடரும் (தொல். இடைச். சூ. 3.) (இ) இஃதொத்தன் என்பது இவனொருத்தனென ‘இஃதென்ற அஃறிணைப்பொருளை உணர்த்திய சுட்டு உயர்திணைப்பொருளை யுணர்த்தி நின்றதென்று நச்சினார்க்கினியரும் (தொல். கிளவி. சூ. 37.) இவ்வாறே வேறுரை காரரும். (தொல். கிளவி. சூ. 38.) கூறுவர்.
(ஈ) இந்நூற் பக்கம் 377: 2. (ஆ) குறிப்பும் பார்க்க.

1. (அ) “பஞ்சி மேன்மிதிக் கிற்பினிக் குந்தகை, யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா, மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத், துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்” சூளா. சீயவதை. 29.(ஆ) “முலையாலுழப் பட்டும்” சீவக. 1381.

2. “திருந்திழை மென்றோள்” கலி. 131 : 2.

(பிரதிபேதம்)1கூறினாள், அங்ஙனம் கூறி நீஎன், 2தோற்றம்பொலிவு, 3வினையையாம் உடையேமோ அது எமக்குஇன்றே என்றாள் இது, 4இதனால், 5தோன்றி நின்றது சுரும்பிவர்பூங், 6உழுதாய் என்றதனான் நீ கருத்திடைவிடாது ....................... காணென்றான் என்றதனாற்பயன் ............................ உழுதாயென்றும் நகைக்குறிப்பும் தோன்றி நின்றது மற்று. வினைமாற்று பின்னை.