பக்கம் எண் :

388கலித்தொகை

திருந்தின இழையையுடைய மென்1றோளிலே யான் எழுதின கரும்பின் றோற்றப் பொலிவெல்லாம் நின் முலைகள் இடைவிடாமற் புணர்ந்ததனாலுண்டான பயனல்லவோ? அதனோடேகூடப் பழுதறுகின்ற ஒளியினையுடைய முகமானது குவளையோடு இகலிப் புணர்ச்சிதோறும் பொலிவு பெறும்படி பூத்த கண்களின் றோற்றப்பொலிவு நீ இடைவிடாமற் புணர்ந்ததனாலுள்ள பயனல்லவோ? (1) முல்லைமுகையோடு மாறுபாடுகொள்ளும் எயிற்றினை 2யுடையாய்! இத்தோற்றப்பொலிவுக ளன்றி வேறே தோற்றப்பொலிவுண்டாக நீ புணர்வா 3யென்றான்; எ - று.

என்றதனால், நின்கருத்து இடைவிடாது முயங்குதலேயாயின் இனி நீ இடைவிடாமல் முயங்கினைகாணென்றான். அதன் பயன் இனி வரைவே னென்றதாம். 4இது நீ என்கீழ் உழுதாயென நகைக்குறிப்புத்தோன்ற நின்றது. மற்று, வினைமாற்று. குவளையென்றது, கண்ணை.

இதனால் அருமைசெய்தயர்த்துமில்லையென்றான். இதனால் நீ கரும்புங் குவளையுமன்றி வேறு என்னுழுவாயென ஒரு நகைக்குறிப்புத் 5தோன்றிற்று.

19எல்லா, நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீகூறு
முற்றெழி னீல மலரென வுற்ற
(2)விரும்பீர் வடியன்ன வுண்கட்கு மெல்லாம்
பெரும்பொன்னுண் டென்பா யினி

எ-து: அதுகேட்ட தலைவி ஏடா! என் அவயவங்களில் தோற்றப்பொலிவு உண்டாகக் கூறாமல் என் தோள்களில் நீ எழுதப்பட்ட கரும்பிற்குத் தோற்றப் பொலிவுண்டென்று நீ கூறு; அதற்கு இயைந்தேன் ; இனி அலர்ந்த செவ்வி குலைந்து முற்றின அழகையுடைய நீலமலரென்று பிறர் கூறும்படியாக


1. (ஆ) “நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த, செறிமுறை” (ஆ) “முல்லை முகையு முருந்து நிரைத்தன்ன, பல்லும்”

2. (அ) ”இரும்பீர் வடியொத்து மைவிளங்குங் கண்ணொளி” பரி. 7: 58. (ஆ) “எஃ : குற், றிருவே றாகிய தெரிதகு வனப்பின் மாவி னறுவடி, போலக்காண்டொறு மேவ றண்டாமகிழ்நோக்குண்கண்” அகம். 29. 5 - 7. (இ) “மாவடு வகிரன்ன கண்ணி” திருவாசக. அடைக்கலப். 8. (ஈ) “வடுப்பிளவனைய கண்ணாள்” சீவக. 1573. (உ) “சூதவடுப், பகுத்தே பதித்த தெனவென்னை வாழ்வித்த பாதகக்கண்” அம்பிகா. 122. (ஊ) “வடுவகிரனைய வுண்கண்” (எ) “வடுவகிர் நெடுங்கண்” (ஏ) “வடுவகிர் நெடுங்கணார்” நைடத. நளன்றூது. 133, சுயம்வரப். 168, புனல். 4. என்பவையும் (ஐ) “இளமாங்காய் போழ்ந்தன்ன கண்” கலி. 188 : 28 என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்)1தோளிலேஎழுதின, 2உடையாய் நீ இனித்தோற்றப், 3என்றான்குவளை, 4இதனால்நி, 5தோன்றநின்றது.