| யொடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்க (1) ணிரும்புலி கொண்மார் நிறுத்த வலையுளோ | 25 | ரேதில் குறுநரி பட்டற்றாற் காதலன் காட்சி யழுங்க நம்மூர்க் கெலாஅ மாகுலமாகி விளைந்ததை யென்றுந்தன் வாழ்க்கை 1யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் 2வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து. |
இஃது இரவுக்குறி அலராமென்றஞ்சித் தலைவனை3 நீக்கி நிறுத்தக் கருதிய தோழி “அல்லகுறிப் படுதலு மவள்வயி னுரித்தே, யவன்குறி மயங்கிய வமைவொடு வரினே” என்னும் (2) சூத்திரத்தான் அல்லகுறிப்படுதல் தனக்கும் உரித்தாகலின், அவன்செய்த 4குறியறிதற்குப் புறத்துச் சென்ற வழி, ஆண்டுப் பிறந்ததோர் செய்தியாக ஒரு பொய்யை (3) நாடகவழக்கும் உலகியல் வழக்குமாகப் புனைந்துரை வகையாற் படைத்துக்கொண்டு, பிற்றை ஞான்று தலைவன் சிறைப்புறமாகத் தலைவிக்குக் கூறியது. இதனை, “இரந்து குறை யுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி, நிறுத்த லன்றியும், வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு, நல்வகை யுடைய 5நலத்திற் கூறியும், 6பல்வகை யானும் படைக்கவும் பெறுமே” (4) 7எனப் பொருளியற்சூத்திரத்துப் பொய்தலைப் பெய்தலையும் படைக்கவும் பெறுமென வழுவமைத்த லாற்றாற் கொள்க.
1. (அ) “கூனுடை வெஞ்சிலைக் குன்ற வாணர்தா, மானுடன் புலிபட வளைத்த வார்வலை” சேது. கந்தமாதன. 60. என்பதும் (ஆ) “மலர்க், கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த, பெருங்கண்ணி யிறபுனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதின், மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே” வெங்கைக் கோவை. 229. என்பதும் இங்கே அறிதற்பாலன. 2. தொல். கள. சூ. 42. 3. நாடக வழக்கென்பது உள்ளோனாவது இல்லோனாவது தலைவனாகச் சிலசெய்திகளைப் புனைந்துரைத்தல். இச்செய்திகளில் யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாது உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி சிறிது இல்லனவுங் கூறப்படுமென்ப. 4. தொல். பொருளி. சூ. 43. இதனுரையில் இச்செய்யுளை வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்ததற்கு இவரும், கலிவெண்பாட்டு. (பிரதிபேதம்)1வாட்கை, 2வீட்கை, 3நீங்கிநிறுத்த, 4குறிப்பறிதற்குப், 5நயத்தில், 6பல்வகையாகவும், 7என வழுவமைத்த.
|