பக்கம் எண் :

394கலித்தொகை

இதன் பொருள்.

திருந்தின இழையினையுடையாய்! தன்னுடைய மயிர் நீங்குதலாற் றட்டையான தலையினையும் படாத்தினையு முடையனாய்க் கருங் குட்டத் தாலே காலுங் கையுங் குறைந்து கடமைத்துறைப்பட்டு வந்து நந் தெருவி னின்றும் போகாமல் ஒளித்துத்திரியும் முடமாகிய முதிர்ந்த பார்ப்பானைத் தோழி நீ பேணுவாயாகவென்று பலகாலுங் கூறுவை; அதனைப் பேணாதே (1) உயிர்ப்பன்மைகளெல்லாஞ் சேரத்துயில்கொண்டகங்குலிலே அழகிய துசி லாற் போர்த்த போர்வையை வாங்கி அழகுபெற உடுத்து நம்முடைய மென்மையினிய மார்பையுடையவன் செய்யுங் 1குறியை உற்றுநின்றேனாக அப்பார்ப்பானாலே இராக்காலத்தே பெரிய நகைநிகழ்ந்தது; அந்நகை ஊர்க் கெல்லாங் கொண்டாடுதற்கு அமைந்திருக்கும் ; அது நிகழ்ந்த படியைக் கேளாய்; அவன் அவ்விடத்தே குனிந்துபார்த்து மகளிர் நிற்குங் காலம் அன்றாக இவ்விடத்து நின்ற 2நீர் யாரென்று முற்படக்கூறி, சிறியவளே !நீ என்னாலே அகப்படுத்திக்கொள்ளப்பட்டாயென்று கூறிப் பையெனப் பணிந்து வைக்கோலைக் கண்ட முதிய எருதுபோலே என்பக்கத்தினின்றும் போகாதே நின்று தையால்! தம்பலந் தின்பாயென்று தன் பாக்கிடும்பையைக் குலைத்து நீ எடுத்துக்கொள்ளென்று தந்த அளவிலே யான் அங்கு ஒருவார்த்தையும் வாய்திறந்து சொல்லேனாய் நிற்கையினாலே, தான் அஞ்சி முன்புகொண்டுநின்ற ஒழுக்கத்தைக் கைவிட்டுக் கடிதாக நீங்கிப் பின்னை யான் பெண்பாற்பசாசாகிய நின்னையொழிந்த ஆண்பாற் பசாசு; எனக்கு அருள்; அங்ஙனம் அருளாது என்னை வருத்துதலைச் செய்வையாயின் இவ்வூரில் நீ பெறும் (2) பலியை நீ பெறாமல் யான் எடுத்துக்கொள்வே னென்று பல வார்த்தைகளையும் பேணாமல் வாயாற் சொல்லிநிற்க, முதியபார்ப்பான் என்னைப் பெண்பசா சென்று கருதி அஞ்சினானாதலை யான் அறிந்து ஒருகையாலே மணலை அள்ளிக்கொண்டு ஒழியாது அவன்மேலே தூவக்கண்டு அவ்விடத்தேநின்று கடிதாகக் கதறி ஊர்க்கெல்லாங் கேட்பக் கூப்பிடத் தொடங்கினான்; எந்நாளுந் தன் தொழில் அவ்வாறு தனிநிற்கும் மகளிரைக்கண்டால், தன் காம வேட்கையாலே மேல்விழுதலாகக்கொண்ட முதியபார்ப்பானுடைய விரும்பு


இருபத்தொன்பதடியான் வந்ததற்குப் பேராசிரியரும் இவரும் (தொல். செய். சூ. 160.) மேற்கோள் காட்டியுள்ளார்.

1. மன்பதை - உயிர்ப்பன்மை; புறம். 71 : 17, 210 : 1. இது மக்கட் பன்மை குறித்தும்வரும். இச்சொல் மன்பது என்றும் அருகிவழங்கும்.

2. (அ) ”பலிகொண்டு பெயரும் பாசம் போல” பதிற். 71 : 23. (ஆ) “ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்,
கடுஞ்சூன் மகளிர் நெடும்பு ணுற்றோர், தந்துயர் கெடுக்கு மந்திர மாக்கண், மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென, நின்றெறி பலியி னெடுங்குர லோதையும்” மணி. 7 : 81 - 85.

(பிரதிபேதம்)1குறியை ஐயுற்று, 2நீயாரென்று.