பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி395

தலையுடைய பெரிய தண்ணிய நாடகம் நங் காதலர் நம்மைக் குறியிடத்து வந்து காணுங் காட்சி கெடும்படியாக நமக்கு வருத்தமாய் விளைந்தது; இது 1விளைந்தபடி ஒன்றற்குங் கெடாத வலியினையும் வளைந்த வரியினையுந் தறு கண்மையினையுமுடைய புலியாலுள்ள பயனைக் கொள்ளுதற்கு நிறுத்தின வலையிலே அதன் றொழிற்கு வேறாகியதோர் குறுநரி அகப்பட்ட 2தன்மைத்தாயிற்று; ஆதலால் இனி இரவிற் குறிநிகழ்ச்சியின்றுபோலுமென்றால்; எ - று.

வீழ்க்கை வாழ்க்கைபோல் நின்றது. காரக்குறைந்தது அக்குச்சாரியை. 3குறழாப் பாராவென்க.

வைகாண் முதுபகடெனவே காம இன்பம் நுகர்தலாற்றாமை காட்டி நின்றது. ஏனைப்பிசாசெனவே அவள் பெண்பாற்பசாசும் தான் ஆண்பாற் பசாசுமென்பது உணர்த்திற்று. அருளெனப் பிரிக்க. ஆங்கே 4கடிதரற்றி நம் மூர்க்கெலாம் பூசறொடங்கினனென மாறுக. (1) தம்பலம், தாம்பூலமென்னும்வட மொழித்திரிவு. தின்றியோ, ஓகாரம் அசை.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

இஃது ஒருபொருணுதலாது அடியிகந்து தளைவிரவி வந்த கலிவெண்பாட்டு. (26)

5குறிஞ்சிக்கலி முற்றும்.


1. தாம்பூல மென்பது (அ) “ஒருவர் வாயுமிழப்பட்ட தம்பல மொருவர் வாய்க்கொண்டு” சீவக. 2821. என இவ்வாறே திரிந்து வருதலுமன்றி, (ஆ) “வெள்ளிலைத் தம்பல்கண்டார்” (இ) “வெள்ளடைத் தம்பற்குப்பை” (கம்ப. வரைக்காட்சி. 49, கார்கால. 28) என ஈறுகுறைந்தும் வரும்.

(பிரதிபேதம்)1விளைந்தபடி புலிகொண்மார் நிறுத்தவலையிற்குறுநரி பட்டதன்மைத்தாயிற்று ஆதலால் இனிஇரவிற்குறிநிகழ்ச்சி இன்று போலுமென்றாள் ஒன்றற்கும், 2தன் மைத்தாலென்க. வீழ்க்கை. 3குழறாப்பாரா, 4கடிந்தரற்றி நம், 5குறிஞ்சிக்கு நச்சினார்க்கினியான்செய்த வுரைமுடிந்தது நன்றாக.