பக்கம் எண் :

மூன்றாவது மருதம்401

எ - து; ஆரவாரத்தாற் 1பொலிவுபெற்ற (1) சிறப்பில்லாமையைக்கொண்ட (2) பரத்தையரைப் பூப்பேசிக்கொள்கின்ற 2கலியாணத்திலுண்டான நின்னுடைய அழகினையுடைய 3நாறுகின்றமணத்தினை விடியற்காலத்தே யாங்கள்பெற்றதுயாம்.4அணைபோலும் மெல்லியதோள் மெலியும்படியாக நின் நெஞ்சிற்கு அமர்ந்த பரத்தையரைக் கூடி மணமனையிடத்தர யென்று பிறர்சொல்ல நினக்கு உண்டான வளப்பத்திலும் மாட்சிமையுடையதொன்றன்றோ? எ-று.

5கௌவையிற் பொலிந்த பொதுக்கொண்ட பூவணி வதுவையெனமாறுக.

(3) மருதத்திற்குச் சிறுபொழுது வைகறையென்பதுதோன்ற6 வைகறைப்பெற்றதை என்றாள்.

13 கனலுநோய்த் தலையுநீ கனங்குழை யவரொடு
புனலுளா யெனவந்த பூசலிற் பெரிதன்றோ
(4) தார்கொண்டா டலைக்கோதை தடுமாறிப் பூண்டநின்
னீரணி சிதையாதெம் மில்வந்து நின்றதை

1. (அ) பொதுவென்பது சிறப்பென்பதற்கு எதிர்மொழியாக வழங்குதலும்,(ஆ) "ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது" (புறம். 58: 27) என்புழி, பொதுமொழியென்பதற்குச் சிறப்பில்லாதமொழியையென்றும்
(இ) "புலமிக் கவரைப் புலமை தெரிதல்,............பொதுமக்கட் காகாதே"(பழ. 5) என்புழி, பொதுமக்கட்கென்பதற்குச் சிறப்பில்லாத மக்கட்கென்றும் முன்னோரால் உரை எழுதப்பெற்றிருத்தலும் இங்கே அறிதற்பாலன.

2. "நுாறுபத் தடுக்கி யெட்டுக்கடை நிறுத்த, வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை, மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென" சிலப். 3: 164 - 166.

3. தொல். அகத். சூ. 8. நச். உரையிலும் மருதத்திற்கு வைகறை வந்ததற்கு, "அணைமென்றோள்..............பெற்றதை" என்னும் பகுதி மேற்.

4. (அ) "ததைந்தகோதை தாரொடுபொலியப், புணர்ந்துட னாடுமிசையே" (மது. 265 - 266.) (ஆ) "தாருங்கோதையும் - மைந்தர்தாரும்மகளிர் கோதையும்" (இ) "மகளிர் கோதை மைந்தர் புனையவு, மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்" (பரி. 6: 46. உரை, 20: 20 - 21.) (ஈ) "கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக், காதன் மகளிரு மைந்தருங் காணிய" (சீவக. 2119.) எனவும் (உ) "மைந்தர் கண்ணி மகளிர் சூடவு, மகளிர் கோதை மைந்தர் மலையவும்" (பட். 109 - 110.) எனவும்

(பிரதிபேதம்) 1பொலிபெற்ற: 2கல்லியாணத்தி லுண்டான, 3நாறுமணத்தினை, 4அணைபோல மெல்லிய, 5கௌவையுட்பொலிந்த, 6வைகறைபெற்றதை.