முகம்போலவென்ற ஏனையுவமம் மேல்வருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்துநின்றது. "சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண, (1) முறு 1தூவி தாமிவையோ ரைந்து." (2) துணையைப் புணர்ந்த காலத்து மெய்யுருகி உதிர்ந்த தூவிதானும் மிக மெல்லிதாயிருக்குமென்பது உணர்தற்குத் துணை புணரன்னமென்றார். பாலைச் சிறிதென்னாது (3) சிலவென்றல் 2மரூஉ. தாமரை வண்டு நுகர்வதற்குப்பயன்கொடாது வடுத்தீண்ட 3அலருமென்பதனால் நின் தலைவி நீ நுகர்ந்த செவ்விபெறாமற் 4சேக்கை யிடத்தே இருந்து பால் உண்ணாத புதல்வன் பால் உணப் பெற்றதற்கு அவனை முத்தங் கொண்டு மகிழ்ந்திருக்குமாறுபோல (4) ஆற்றியிருக்குந்தன்மை எமக்கின்றெனக் 5காமக் கிழத்தி உள்ளுறையுவமங்கூறினாள். 9 | (5) கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப் பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டென்றானோ |
1. "உறுதூவி சேக்கையோ ரைந்து" நெடுநல். 131. 3 - உரை. சீவக. 838. உரை. 2. பறவைகள் போகத்தால் அவசமாகி மெய்யுருகுமென்பதை, "அருந்தளிர் நயந்து நல்கி யலகுட னலகு சேரப்பொருந்துமுன் னவசமாகிப் போகமென் குயிலும் பேடு, மிருந்துமெய் யுருகுங் காவில்" என்பதும் வலியுறுத்தும். வில்லி. சம்பவச்சருக்கம். 96. இந்நூற் பக்கம் 432 : 1 - ஆம் குறிப்பும் பார்க்க. 3. இந்நூற் பக்கம் 73 : 4 - ஆம் குறிப்புப்பார்க்க. 4. (அ) "அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம், புதல்வனை மெய் தீண்டப் பொருந்துத லியைபவால்" (கலி. 70. 11 - 12) என்பதும், (ஆ) "ஊடி யவரை யுணராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று" (குறள். 1304) என்பதன் விசேட வுரையில் பரிமேலழகர் "நீர் பரத்தையரிடத்திராயவழி எம்புதல்வரைக்கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற் குரியமல்லம்; அன்மையின், எம்மை யுணர்த்தல் வேண்டா; உரியராயூடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச்சென்மி னென்பதாம்." என்று எழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலன. 5. பாணன் முதலியோர் வாயிலாயதற்கு, "கண்ணிநீ...............துகளினை" என்னும் பகுதிகள் மேற்கோள்; தொல். கற்பி. சூ. 6. நச். (பிரதிபேதம்) 1தூவி சையையோ ரைந்து, 2மரு மிகுதியையுடைய ..................... தாமரை வண்டு, 3அலரும் என்பதிதன்கருத்து இதனால் நின்தலைவி, 4செங்கையிடத்தே, 5காமக்கிழத்தியு முள்ளுறை.
|