(1) பேணானென் றுடன்றவ ருகிர்செய்த வடுவினான் மேனாணின் றோள்சேர்ந்தார் நகைசேர்ந்த விதழினை எ - து: நம்மைப் பேணுகின்றிலனென்று கோபித்தவர் தம்மைப் பேணுதற்காக உதிராற்செய்த வடுக்காரணமாக அவர்க்குப் பின்னுள்ள நாளிலே நின் தோளைச் சேர்ந்த பரத்தையருடைய எயிறு அழுந்தின இதழைத் தங் கூட்டத்திற் பிறந்த இன்பத்தைக் கருதி நீ காவல்கொண்ட பரத்தையரைச் செறியுந் தோறும் யாம் அழும்படி நின்னைப் பண்ணாலேகளிப்பிக்கும் பாணன் எனக்குக் காட்டென்று சொன்னானோ? எ - று. மேனாளென்றது, பின்னாள். யாம்அழப் பண்ணினாற் களிப்பிக்குமென்றது, இல்லறம் நிகழ்த்துவதற்கு உரியனவற்றைப் பாடிக்காட்டி யாம் வருந்தாதபடி பண்ணாது (2) பரத்தையரிடத்தே ஒழுகுதற்குவேண்டுவனவற்றைப் பாடிக் காட்டிக் களிப்பிப்பனென்றவாறு. 13 | (3) நாடிநின் றூ (4) தாடித் துறைச்செல்லா ளூரவ ராடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட்டென்றாளோ |
1. (அ) "தொடியு முகிரும் படையாக நுந்தை, கடியுடை மார்பிற் சிறுகண்ணு முட்காள், வடுவுங் குறித்தாங்கே செய்யும்" (ஆ) "புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல், வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும்" (இ) "கூருகிர் சாடிய மார்பும்" கலி. 82 : 28 - 30. 88 : 10 - 11. 91 : 12. (ஈ) "கள்ளுயிர்க்குமென் குழலியர் முகிழ் விரற் கதிர்வாள், வள்ளுகிர்ப் பெருங் குறிகளும் புயங்களின் வயங்க" உ) "மடந்தையர்....................தங் கூருகிர்ப் பெருங்குறி தோண்மேற், கவச நீங்கினர்க் கண்டுகண் டாருயிர் கழித்தார்" கம்ப. பிணிவீட்டு. 39; படைத்தலைவர். 66. (ஊ) "அகனமர் கணிகைய ரடிகள் சூடியே, முகனுறு முவகையான் முயங்கி யன்னவர், நகனுறு குறிகொளீஇ நாளுங் காமநூற், றகைமைசெய் காளையர் தொகுதி சான்றதே" (எ) "ஆறறி முனிவர னநங்க நூன்முறை, வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள், கீறின ணகத்தினால்" கந்த. திருநாட்டுப். 53. அசுரர்தோற்று. 15. 2. "நிறைநீ ரூரர் நெஞ்சகம் பிரிக்கும், பிணிமொழிப் பாணன்" கல். 59. 3. ஆடை கழுவுவாளை வாயிலென்றதற்கு "நாடிநின்..............அரக்கினை" என்பது மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 6 நச். 4. "கண்ணாடி வென்று" (சீவக. 2227) என்பதற்கு, ‘கண் எல்லாரிடத்திலும் உலாவி வென்று’ என்று பொருள் கூறி, "காலாடு போழ்தின்" (நாலடி. 113.) ‘என்றாற்போல’ என இவ்வுரையாசிரியர் பொருள் விளக்கியிருப்பதும், "வாளாடு கூத்தியர் கண்போல்" (நாலடி. 191) என்பதும் இங்கே அறிதற்பாலன.
|