பக்கம் எண் :

மூன்றாவது மருதம்547

ஒருத்தி, வரியா ரகலல்குற் காழகம்
ஒருத்தி, யரியார் ஞெகிழத் தணிசுறாத் தட்ப
ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று
வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன்
றண்டா ரகலம் புகும்;

 

42ஒருத்தி, அடிதாழ் கலிங்கந் தழீஇ யொருகை
முடிதா ழிருங்கூந்தல் பற்றிப்பூ வேய்ந்த
கடிகயம் பாயு மலந்து;

 

45ஒருத்தி, கணங்கொண் டவைமூசக் கையாற்றாள் பூண்ட
மணங்கமழ் கோதை பரிபுகொண் டோச்சி
வணங்குகாழ் வங்கம் புகும்;
ஒருத்தி, இறந்த களியா னிதழ்மறைந்த கண்ணள்
பறந்தவை மூசக் கடிவாள் கடியு
மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை;
ஆங்க, கடிகாவிற் காலொற்ற வொல்கி யொசியாக்
கொடிகொடி தம்மிற் பிணங்கி யவைபோற்
றெரியிழை யார்ப்ப மயங்கி யிரிவுற்றார் வண்டிற்கு
வண்டலவர் கண்டே னியான்;

 

55நின்னைநின் பெண்டிர் புலந்தனவு நீயவர்
முன்னடி யொல்கி யுணர்த்தினவும் பன்மாண்
கனவின் றலையிட் டுரையல் சினைஇயான்
செய்வதி லென்பதோ கூறு;

 

59 பொய்கூறேன், அன்ன வகையால்யான் கண்ட கனவுதா
 னன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
 கூடிப் புணர்ந்தீர் பிரியன்மி னீடிப்
 பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல
 வரும்பவிழ் பூஞ்சினை தோறு மிருங்குயி
 லானா தகவும் பொழுதினான் மேவர

 

65நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந்
 தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா
 ரானா விருப்போ டணியயர்ப காமற்கு
 வேனில் விருந்தெதிர் கொண்டு.