பக்கம் எண் :

548கலித்தொகை

இது பரத்தையிற்பிரிந்து வந்த தலைவன் வாயில்பெறாது ஆற்றாமை வாயிலாகப் புக்கு, தலைவியை நயப்பித்தல் காரணமாகத் தெய்வமகளிர் 1பொய்தலயர்வதோர் கனாக்கண்டேன் ; அது 2நன்வாயாப் பருவம் வந்து இறுத்தது பாராயென ஊடறீர்வது பயனாகத் 3தலைவிக்குக் கூறியது.

இதன் பொருள்.

44புனவளர் பூங்கொடி யன்னாய் கழியக்
 கனவெனப் பட்டதோர் காரிகை நீர்த்தே
 முயங்கிய நல்லார் முலையிடை மூழ்கி
 மயங்கிமற் றாண்டாண்டுச் சேறலுஞ் செல்லா

 

5 துயங்கி 5யிருந்தோர்க் குயர்ந்த பொருளு
 மரிதி னறஞ்செய்யா வான்றோ ருலகு
 (1)முரிதி னொருதலை யெய்தலும் வீழ்வார்ப்
 பிரிதலு மாங்கே புணர்தலுந் தம்மிற்
 6றருத றகையாதான் மாற்று

எ - து: புனத்திடத்துவளர்ந்த பூவையுடைய கொடியையொப்பாய்! (2) 7பொருள்வயிற்சென்று முயலாதே வருந்தியிருந்தவர்களுக்கு அவர்கள் இருந்த இடங்களிலே இடங்களிலே மிக்க பொருளும் தானே செல்லுதலும் 8அரிதாயிருத்தலாலே உலகம்தமக்கு உரித்தாக அறத்தைச்செய்யாது இப்படி இருக்கவும் அறஞ்செய்தற்கு அமைந்தோர் அறுதியாக அவ்வறத்தைச் செய்தலும் கனவிடத்தின்றாய்ப்போகத் தாம் முயங்கிய மகளிருடைய முலையினிடையிலே அழுந்திய இன்பத்தே மயங்கி விரும்புகின்ற கணவரை மகளிர் (3)ஊடலாற் பிரிதலும் அப்பொழுதே ஊடறீர்ந்து புணர்தலுமாகிய தம்மின் 9மாறான இன்பத்தைக் 10கனவிடத்தே தருதலை விலக்காதாம்; இனி மிகுத்த சாதலாற் கனவென்றுசொல்லப்பட்டது ஓர் அழகினையுடைத்தாகிய நீர்மையையுடைத்தாயிருந்த தென்றான். எ - று.


1. ‘உரிது’ இந்நூற்பக்கம். 455 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

2. "சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது" (கலி. 18 : 5) என்பதும்(ஆ) "மடியிலான் செல்வம்போன் மரனந்த" (கலி. 35 : 1.) என்பதும் அதன் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்துவனவும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.

3. "ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங், கூடி முயங்கப் பெறின்"குறள். 1330.

(பிரதிபேதம்) 1. பொய்தலாடுவதோர், 2. நனவாய்ப்பருவம், 3. தலைவன்றலைவிக்கு, 4. புனம்வளர், 5. இருந்தார்க்கு, 6. தருதறகேயாதார் மற்று, 7. பொருள்வையிற் சென்று, 8. அரிதாவிருத்தலாலே, 9. மாற்றான, 10. களவிடத்தே யொருதலை.