என்றது “இன்பமும் பொருளும் அறனும்” (1) என்று ஆசிரியர் கூறிய இலக்கணம்பற்றிச் சிறந்த இன்பத்தையே 1தந்து ஏனை அறனும்பொருளுந் தாராமற் போயிற்று, 2இக்கனவு; ஆதலால், அதனை ஓர் காரிகைநீர்த்தென்றான். 3பொருளுமென்ற உம்மை, சிறப்பு. மற்று, அசை. 10 | நனவினாற் போலு நறுநுதா லல்கற் | | கனவினாற் சென்றேன்(2) கலிகெழு கூடல் | | (3)வரையுறழ் நீண்மதில் வாய்சூழ்ந்த (4)வையைக் | | கரையணி காவி னகத்து |
எ - து: நறிய நுதலினையுடையாய்! ஆரவாரம்பொருந்தின 4மதுரையினுடைய வரையை மாறுபடுகின்ற நீண்ட மதிலிடத்தைச்சூழ்ந்த வையையாற்றங்கரையை அழகுபெறுத்தின பொழிலினிடத்தே நனவிடத்தே சென்றாற்போல இராப்பொழுதிலே கனவிடத்தே சென்றேனென்றான். எ - று. 14 | உரையினி, (5)தண்டாத்தீஞ் சாய னெடுந்தகா யவ்வழிக் | | கண்ட தெவன்மற்று நீ |
எ - து: அதுகேட்ட தலைவி, அமையாத இனிய மென்மையினையுடைய (6) நெடுந்தகாய்! பின்னைநீ அவ்விடத்துக்கண்டது எத்தன்மைத்து? 5அதனை இனிச்சொல்லென்றாள். எ - று. 16 | கண்டது, உடனம ராயமொ டவ்விசும் பாயு | | மடநடை மாயின மந்தி யமையத் | | திடன்விட் டியங்கா விமையத் தொருபா | | லிறைகொண் 6டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன் | | றுறைகொண் டுயர் 7மணன் மேல், ஒன்றி நிறைவதை |
எ - து: அதுகேட்ட தலைவன், யான்கண்டது கேள்; அன்னங்கள் தன்னிடத்தைவிட்டுப்போகாத இமயமலையில் ஒருபக்கத்தே
1. தொல். கள. சூ. 1. 2. “கலிகெழு கூடல்” சிலப். 30: 149. 3. (அ) "கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி” பதிற். 16: 1.(ஆ) "கிடங்கை நாமவேலை யாமெனா, மேக மொண்டு, கொண்டெழுந்து விண்டொடர்ந்த குன்றமென், றாகநொந்துநின்றுதாரை யம்மதிற்கண் வீசுமே” கம்ப. நகரப். 15. 4. இந்நூற்பக்கம் 164 : 1-(ஃ) குறிப்புப் பார்க்க. 5. “தண்டாத்தீஞ் சாயற் பரத்தை வியன்மார்ப” கலி. 93: 2: 6. இந்நூற்பக்கம் 41: 1-ஆம் குறிப்புப்பார்க்க. (பிரதிபேதம்) 1. தந்தனை யறனும், 2. கனவாதலால், 3. பொருளும்உம்மை, 4. மதுரையினையுடைய, 5. தனைச்சொல், 6. இருந்தன நல்லாரை, 7. மணன்மேல். எ - து.
|