பக்கம் எண் :

மூன்றாவது மருதம்553

எ-து; ஒருத்தி, அடியிலே தாழ்ந்த 1துகிலை ஒருகையாலே தழுவிக் கொண்டு மற்றைக்கையாலே முடித்த முடி குலைந்த கரிதாகிய கூந்தலைப் பிடித்துக்கொண்டு அலவுற்ற மிகுதியையுடைய பூ வேய்ந்த குளத்திலேபாயாநிற்கும். எ-று.

45 (1) ஒருத்தி, கணங்கொண் டவைமூசக் கையாற்றாள் பூண்ட
மணங்கமழ் (உ) கோதை பரிபுகொண் டோச்சி
வணங்குகாழ் வங்கம் புகும்

எ-து; ஒருத்தி, திரட்சிகொண்டு வண்டுகள் மொய்க்கையினாலே கையாற் கடியமாட்டாளாய் மணம் நாறுகின்ற மாலையை அறுத்துக்கொண்டு வலியாக உள்ளே பூண்ட ஒடத்தே பாயும். எ-று.

காழ்பூண்டவென்க. பரிபு, 2 செய்பெனெச்சம்.

48ஒருத்தி, இறந்த களியா னிதழ்மறைந்த கண்ணள்
பறந்தவை மூசக் கடிவாள் (4) கடியு
மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை

பவழஞ் சேர்ந்த பல்காழல்குல, ரவிழ்ந்த பூந்துகி லங்கையி னசைஇ, நகைப்பூங் கோதையொடு நான்ற கூந்தற்கு, மிகைக்கை காணாது...... பொய்கை புக்கனர்'' (பெருங். (1)43:145-152) என்பதும் காண்க.

1. ''பொறிவரி வண்டினம் புல்லுவழி யன்றியு, நறுமலர் மாலையின் வறிதிடங் கடிங்தாங்கு'' என்புழி, புல்லுதல் என்பதற்கு, இன மென்று புல்லுத லென்று பொருள் கூறி ''ஒருத்தி கணங்கொண்டவை.........கொண்டோச்சி'', ''ஒருத்தி, இறந்த ......... சோர்ந்தனள் கை'' என்பவற்றை மேற்கோள்காட்டினர் அடியார்க்குநல்லார்; சீலப். 14: 134. உரை.

2. (அ) ''வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை, கொண்டோச்சுங் காதலார்'' (ஆ) ''கற்பெனு மாலை வீசி நாணெனுங் களிவண் டோப்பிச் சொற்புக ரின்றித் தோழிக்கறத்தினோடரிவை நின்றாள்'' சீவக. 1800

3. (அ) '' நதியினுங் குளத்தும் பூவா நளினங்கள் குவளை யோடு, மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மாலைத் தும்பி, யதிசய மெய்திப் புக்கு வீழ்ந்தன வலைக்ப் போகா, புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்'' கம்ப. பூக்கொய். (ஆ) ''கோல நாண்மலர் கொய்பவ ளங்கையி, லோலி டுஞ்சுரும் போச்சவும் போலகில, மாலுழந்து மறிந்து விழுவன'' நைடத. போதுகொய். 14.

4. (அ) '' நட்பாடறேற்றாதவர்'' என்புழி, தேற்றாமை தன்னவினையாய் நிற்றற்கு, ''கடியு, மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை'' என்பதுமேற்கோள்;

(பிரதிபேதம்) * துகிலனை, + செய்தெனெச்சம்.