பக்கம் எண் :

554கலித்தொகை

எ - து: ஒருத்தி அறிவுபோதற்குக் காரணமான (1) 1கள்ளின் களிப்பால் இமை கூடுகையினாலே 2பார்வை மறைந்த கண்ணையுடையளாய்ப் பறந்த வண்டுகள் மொய்க்க ஓட்டுகின்றவள் தன் களிப்பாலே அவற்றை ஓட்டுமிடம் அறியாளாய்க் கைசோர்ந்தாள். எ - று.

கைசோர்ந்தனள்; சினைவினை, முதலொடு முடிந்தது.

ஆங்க, உரையசை; அங்ஙனே 3யெனநின்றது.
51 (2)கடிகாவிற் காலொற்ற வொல்கி யொசியாக்
கொடிகொடி தம்மிற் பிணங்கி யவைபோற்
றெரியிழை யார்ப்ப மயங்கி யிரிவுற்றார் வண்டிற்கு
4வண்டலவர் கண்டே னியான்

எ - து: விளையாட்டையுடைய மகளிர், மிகுதியையுடைய பொழிலிலே காற்றடிக்க ஒதுங்கி வளைந்து கொடியுங் கொடியும் தம்மிற் பிணங்கியவை போலத் தெரிந்த அணிகள் ஆரவாரிப்பத் தம்மிலேமயங்கி அவ்வண்டுகளுக்குக் கெடுதலுற்றார்; யான் கனவைக்கண்டேனென்றான். எ-று.

55நின்னைநின் பெண்டிர் புலந்தனவு (3)நீயவர்
முன்னடி யொல்கியுணர்த்தினவும் பன்மாண்
கனவின் றலையிட்டுரையல் சினைஇயான்
செய்வதி லென்பதோ கூறு.

குறள். 187. பரி. (ஆ) "தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும” புறம். 202: 16.

1. (அ) "அந்தீந் தேறன் மாந்தினர் மயங்கிப், பொறிவரி வண்டினம் புல்லுவழி யன்றியு, நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு” சிலப். 14: 133-135. (ஆ) "கூடிய நறைவாயிற் கொண்டன விழிகொள்ளா, மூடிய களிமன்ன முடுகின நெறிகாணா, வாடிய சிறைமாவண் டந்தரி னிசைமுன்னாப், பாடிய பெடைகண்ணா வருவன பலகாணாய்” கம்ப. வனம்புகு. 13.

2. (அ) கடியென்னும் உரிச்சொல் காப்பு என்னும் பொருளில், வருதற்கு, ‘கடிகா’ என்பது மேற்கோள்; தொல். உரிச். சூ. 87. சேனா. (ஆ) "உறுகா லொற்ற வொல்கி” நற். 300 : 3. (இ) "கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு, வீற்றுவீற் றோடு மயிலினம்போனாற்றிசையுங், கேளி ரிழந்தா ரலமருப” களவழி. 29.

3. “நீ தீயே னலேனென்று மற்றவள், சீறடி தோயா விறுத்தது” கலி. 90: 17 - 18.

(பிரதிபேதம்)1களிப்பால், 2பாவை மறைந்த, 3எனனென்றது, 4வண்டலாய வாக்கண்டேண்.