பக்கம் எண் :

மூன்றாவது மருதம்561

எ - து: பின்னை அந்தக் கடவுள், முத்தையொக்கும் முறுவலையுடையாய்! நாம் மணத்தைச் செய்ய இப்பொழுது 1முகுத்த மென்று (1) அம் முகுத்தம் வாய்ப்பச்சொன்ன அந்தக் கடவுள் காணென்றான். எ - று.

புக்கக்கால், காலீற்று வினையெச்சம். முற்கூறிய கடவுடன்னையே இவள் அறியுமாற்றான் மீட்டுங்கூறினான்; அவற்கு எல்லாக் கண்களும், உளவாகலின்.

அதுவொக்கும்.

எ - து: அதுகேட்ட தலைவி, நீ கூறியது எனக்கும் ஒக்குமெனத் தன தொவ்வாமை கூறினாள். எ - று.

நாவு ளழுந்து தலைசாய்த்து நீகூறு
மாயமோ கைப்படுக்கப் பட்டாய்நீ கண்டாரை
வாயாக யாங்கூற 2வேட்டீவாய் கேளினி

எ - து: 3உள்ளே அழுந்துநாவுடனே தலையைச்சாய்த்து நீகூறுங்கூற்றோ பொய்; ஆகையினாலே நீ எம்மால் அகப்படுக்கப்பட்டாய்; நீ கண்ட கடவுளரை உண்மையாக யாங்கள் சொல்லக் கேட்க விரும்பியவனே! இனி யாங்கள் கூறக்கேளென்றாள். எ - று.

17பெற (2) னசை வேட்கையி னின்குறி வாய்ப்பப்
(3) பறிமுறை நேர்ந்த (4) 4நகாராகக் கண்டார்க்

(ஆ) "பல்லா ரறியப் பறையறைந்து நாட்கேட்டுக், கல்யாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியற், காதன் மனையாளும்” நாலடி. 86. (இ) "நாள் கூட்டமூர்த்த, மவற்றொடு நன்றாய, கோள் கூட்டம் யோகங் குணனுணர்ந்து-தோள் கூட்ட, லுற்றானு மல்லானு மைந்து முணர் வானாற், பெற்றானாட் கொள்க பெரிது” சிறுபஞ்ச. 44. (ஈ) "கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்” நள. சுயம்வர. 165. என்பவைகளும் இங்கே அறிதற்பாலன.

1. அ) "புள்வாய்ப்புச் சொன்ன கணி” சிலப். 12: 'முருந்தேர்’ (ஆ) "புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்” பு - வெ. வெட்சி. 14.

2. (அ) "நின்னசை வேட்கையின்” புறம். 3 : 24; (ஆ) "நீர்நசை வேட்கையின்” மணி. 23 : 112

3. (அ) "செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின” குறுந். 337. (ஆ) "பல்லின் பறிமுறை பாராட்டினையோ” கலி. 22: 10 - 11.

4. நகாரென்பது எயிற்றின் பெயராதலை, “மடவோர், நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்” (சிறுபாண். 56 - 57) என்பதனாலும் அதன் உரையாலும் அறிக.

(பிரதிபேதம்)1முகூர்த்தமென்று வாய்ப்ப, 2கேட்டீவாய் கேளினி, 3உள்ளேயழுந்து, உரையழுந்து, 4 நகராகக்கண்டார்க்கு, நகையராக்கண்டார்க்கு.