பக்கம் எண் :

562கலித்தொகை

கிறுமுறை செய்யு முருவொடு நும்மிற்
செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ

எ - து: நின்னைப் பெறுதலை நச்சின ஆசையாலே நீ செய்த குறியிடத்தே தப்பாமல் வந்த கடவுள்; கண்டவர்களுக்கு இறந்துபடும் நிலைமையைச் செய்யும் வடிவோடே (1) விழுந்தெழுந்த முறைமை சேர்ந்த எயிற்றினையுடையராய் நும்மனையிடத்தே சேரும் முறைமையோடே வந்த கடவுளரை நீ கண்டாயோ வென்றாள். எ - று.

1நகார், ஆகுபெயர்.

(2) பொருளதனைப் பெறுதல்நச்சின ஆசையாலே நின்மனத்திற் கருதிய கருத்துக்களெல்லாம் வாய்ப்பப் பறிந்துபோம் முறைமையைச் சேர்ந்த 2கடவுள்; மனவேட்கையை அடக்கும் 3முறைமையை இகழாராய்த் தம்மைக் கண்டவர்களுக்குத் தீவினை இறும் முறைமையைக் கொடுக்கும் வடிவுடனே நும் இல்லிடத்தே வந்த கடவுளரைக் கண்டாயோ 4வென வேறுமொரு பொருள் தோன்றியவாறு 5காண்க.

வாய்ப்பப் பறிமுறையென்றார், வேரோடே பறிதலின். செறிதல் -அடக்கம்; 6நகை, எள்ளல்.

21நறுந்தண் டகரமு நானமு நாறு
நெறிந்த குரற்கூந்த னாளணிக் கொப்ப
நோக்கிற்பிணிகொள்ளுங் கண்ணொடு மேனாணீ
(3) 7பூப்பலி விட்ட கடவுளைக்கண்டாயோ

1. “கூரெயிற்று முகை வெண்பல்” (கலி. 58 : 4) என்பதும் அதன் உரையும் அவ்வுரையின் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

2. பேரருளதனை யென்றும் படிக்கலாம்

3. (அ) "பூப்பலி செய்ம்மின்” (ஆ) "ஒண்டொடித் தடக்கையி னொண்மலர்ப் பலிதூஉய்” (இ) "பூப்பலி செய்து”
(ஈ) "வெண் மருப்பிரட்டைய வேழ மீமிசைக், கண்மருட் டுறுப்பன கமலப் பூப்பலி, விண்மருட் டுறுப்பன வேந்தி வேதியர், மண்மருட் டுரப்பதோர் வகையின் மன்னினார்” (உ) "பேரொளிப் பீதக வுடையர் பைம்பொனார், லாரொளி தழுவிய வலர்செய் பூப்பலி, போரொளியானைமே னிரைத்துப் போந்தனர்” (ஊ) "நிரந்தன பூப்பலி” (எ) "நிரந்து தேனிமிர் பூப்பலி” (ஏ) "சங்கொடு சிலம்பு நூலும் பாதசா லகமுந் தாழப், பொங்கு

(பிரதிபேதம்)1நகராகுபெயர் பொருளதிணை, (நகை ஆகுபெயர்நகரென்றும் பாடம் என்பது முன் பதிப்பு.),
2 கடவுள், வாய்ப்பப்பறியவென்றார் வேரோடே பறிதலின், மனவேட்கை, 3முறையை, 4என்று, 5காண்க செறிதல், 6நசை எள்ளல், 7 பூப்பலியிட்ட.