பக்கம் எண் :

மூன்றாவது மருதம்613

னல்கிநீ தெளித்தசொ னசையெனத் தேறியாள்
பல்லிதழ் மலருண்கண் பனிமல்கக் காணுங்கால்

எ - து: அன்புற்று நீ நின்னிற் பிரியேனென்று தெளிவித்த சொல்லை இது தான் நச்சப்படும் வார்த்தையென்று கருதித் தெளிந்தவளுடைய பல இதழையுடைய 1மலர்போலும் உண்கண் நீர்நிறைய நீ நாணுமிடத்து அரிய தவத்தையுடைய (1) அறம்வளர்த்த நாயனாரைப்போலயாவரிடத்தும் (2) பொய் கூறாயென ஐயமற்று உலகம் நின்னைப் புகழ்கின்றதன்மைநினக்குக் கெடாதோ தான்? எ - று.

14சுரந்தவான் 2பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கு
(3) மிரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்

தே. (எ) "அருந்தவ னதிசயித்து" திருவால. 60 : 6. எனவும் (ஏ) "பனிவெண் பிறைநறுங்கொன்றைச்சடைபலிதேரியற்கை முனிவன்" பதினொராந். மூத்தநாயனார். 6. (ஐ) "முனிவன்" திருவால. காப்பு. 2. எனவும் வருவன பார்க்க.

1. சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாயிருந்து அறமுரைத்தா ரென்று தேவார முதலியவற்றிற் கூறப்படுதலும் அறமெல்லாம் வளர்க்கும்படி உமாதேவியாருக்கு அருளினாரென்று காஞ்சிப்புராண முதலியவற்றிற் கூறப்படுதலும் இங்கே அறிதற்பாலன.

2. "நெற்றி, யிமையா நாட்டத் தொருவரங் கொண்டு, விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன், விரிகதிர்மணிப்பூ ணவற்குத்தா னீத்த, தரிதென மாற்றான் வாய்மைய னாதலி, னெரிகனன் றானாக் குடாரி கொண் டவனுருவு, திரித்திட்டோன்" பரி. 5 : 29 - 35. என்பதும் "நெற்றிக்கண் இமையா நாட்டத்தையுடைய அவன் பக்கலிலே இந்திரன் ஒரு வரத்தைக் கொண்டு 'இந்தப் புணர்ச்சியாற் றோன்றிய கருவை யழிப்பாயாக' என, மழுப்படையைத் தரித்தவன் வாய்மைய னாதலின் அவ்விந்திரனுக்குத் தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கரிதென மாற்றாதே இவ்வுல கேழும் தன் மெய்ம்மையை வியக்க அதனுருவைப் பலகண்டமாகச் சேதித்தான்' என்னுமதனுரையும். "மண்ணினார் தம்மைப் போல்வார் மாட்டதே யன்று வாய்மை, நண்ணினார் திறத்துங் குற்றங் குற்றமே நல்ல வாகா, விண்ணினார் புகழ்தற் கொத்த விழுமியோ னெற்றி போழ்ந்த, கண்ணினான் கண்டந் தன்மேற் கறையையார் கறையன் றென்பார்" குண்டல. "சாதத்தினரனை யொப்பார்" திருக்கழுக்குன்ற. நகரச். 20. என்பவைகளும் இங்கே நோக்கற்பாலன.

3. (அ) "மாரி பொய்க்குவ தாயினுஞ், சேர லாதன் பொய்யல னசையே" பதிற். 18 : 11 - 12. (ஆ) "இரவலர்க் குள்ளிய, நசைபிழைப் பறியாக்

(பிரதிபேதம்)1மலர்போலுண்கண், 2பொழிந்தற்றாற்சூழ.