பக்கம் எண் :

614கலித்தொகை

கலங்கஞ ருற்றுநின் கமழ்மார்பு நசைஇயா
ளிலங்குகோ லவிர்தொடி யிறையூரக் காணுங்கால்

எ - து: மனங்கலங்குகின்ற வருத்தத்தையுற்று நின்னுடையகமழ்கின்ற மார்பை நச்சினவளுடைய விளங்குகின்ற கோற்றொழில் விளங்குந் தொடி இறையினின்றுங் கழல நீ காணுமிடத்து நீரைச் சுரந்த (1) மேகம் அந்நீரைப் பொழிந்ததன்மைத்தாக நின்னைச் சூழநின்று இரந்த பொருளை நச்சுதலையாவர் சிலர்க்குங் கெடாயென்று உலகங் கூறும் வார்த்தைநினக்குக் கெடாதோதான்? எ - று.

15 உறைவரை நிறுத்தகோ (2) லுயிர் 1திறம் பெயர்ப்பான்போன்
முறைசெய்தி யெனநின்னை மொழிவது கெடாதோதா
னழிபடர் வருத்தநின் னளிவேண்டிக் கலங்கியாள்
பழிதபு (3) வாண்முகம் பசப்பூரக் காணுங்கால்

கழறொடி யதிகன்" (இ) "ஆர்வுற் றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற், பரந்து வெளிப்படா தாகி, வருந்துக" அகம். 192 : 17 - 8, 279 : 12 - 5. (ஈ) "நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது, முன்னமுகத்தி னுணர்ந்தவ, ரின்மை தீர்த்தல் வன்மையானே" (உ) "ஒல்லுவ தில்லென மறுத்தலும்..............இரப்போர் வாட்டல்" புறம். 3. 246, 196 : 4 - 6. (ஊ) "நசையழுங்க, நின்றோடிப் பொய்த்தனிரைதொடீஇ செய்ந்நன்றி, கொன்றாரிற்குற்றமுடைத்து" நாலடி. 111. (எ) "பசைகொண் டவனிற்பப் பாத்துண்ணா னாயி, னசை கொன்றான் செல்லுலக மில்" பழ. 24. (ஏ) "தருவமென்று முன் சாற்றி மறுத்தவர், நரகஞ் சேர்ந்து நலிகுவ ரென்றுமுந், துரை செய்தாய்" பாகவத. (8) வாமனாவதார. 56. என்பவைகளும் (ஐ) இந்நூற்பக்கம் 147. 1-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) "நின், சுரத்தலும் வண்மையு மாரியுள" பரி. 4 : 27; (ஆ) "வானத் தன்ன வண்மையும்" (இ) "மாரி யன்ன வண்மைத், தேர்வே ளாயை" (ஈ) "உள்ளி வந்த பரிசில னிவனென, நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு, மணிக்கல னிறைந்த மணனாறு தேறல், பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, மாரி யன்ன வண்மையிற் சொரிந்து" புறம். 55 : 15; 133. 6 - 7; 397 : 12 - 6.

2. (அ) தெரிகோன் "ஞமன்ன் போல வொருதிறம், பற்ற லிலியரோ" புறம். 6 : 9 - 10. (ஆ) "கூற்றமும் விழையக் கோலினி தோச்சிக், கோட்ட மின்றிக் குடிபுறங் காத்து" பெருங். (5) 8 : 19 - 20.

3. "மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே" கலி. 7; 8.

(பிரதிபேதம்)1திறம்பொய்ப்பான்போல்.