எ - து: நெஞ்சழிகின்ற நினைவு வருத்துகையினாலே நினதருளை விரும்பிக் கலங்கினவளுடைய பழித்தலறும் ஒளியினையுடைய முகம் பசப்புப் பரப்ப நீ காணுமிடத்து உயிரை உடம்பிடத்தே நின்றும் பேர்க்குங் (1) கூற்று வனைப்போல, யாவரையும் உலகத்துறையும் எல்லைதனிலே நிறுத்தினகோலாலே முறைமைசெய்வையென்று உலகம் நின்னைக் கூறும் வார்த்தை நினக்குக் கெடாதோதான்? எ - று. ஆங்கு, அசை. 20 | தொன்னல மிழந்தோணீ துணையெனப் புணர்ந்தவ (2)ளின்னுறல் வியன்மார்ப வினையையாற் கொடிதென நின்னையான் கழறுதல் வேண்டுமோ (3) 1வென்னோர்க ளிடும்பையுங் களைந்தீவாய் நினக்கே |
எ - து: 2எத்தன்மையுடையோர்களுடைய 3வருத்தமுங் களைகின்ற அதனால் இனிய முயக்கத்தையுடைய வியன்மார்பனே! நீ புணருந்துணையென்று கருதிப் புணர்ந்தவள் தனது இயற்கைநலத்தையும் இழந்தாள்; நீ இத்தன்மையையாய் இராநின்றாய்; இது நினக்குக் கொடிதென்றுநின்னையான் கோபித்தல்வேண்டுமோ? நீயே அளிப்பாயாகவென்றான். எ - று. 4இழந்தோள்: ஆ, ஓவாய்நின்றது. இதனால், தலைவற்கு அசைவுபிறந்தது. இஃது ஆறடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடி யாசிரியச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (35) 5மருதக்கலி முற்றும்.
1. நிறுத்துதலைக் கூற்றின் றொழிலாகப் பொருத்திக் கொள்ளின், "செயிரிற் குறைநாளாற் பின் சென்று சாடி, யுயிருண்ணுங் கூற்றமும் போன்ம்" கலி. 105 : 37 - 38. என்பதும் அதன் குறிப்பும் ஒப்பு நோக்கற்பாலன. 2. "இன்னுறல் வியன் மார்ப" கலி. 8 : 24. 3. "என்னோர் மருங்கினு மேத்தி" என்புழி என்னோருமென்பதற்கு எல்லோரு மெனப் பொருளெழுதி யிருத்தல் ஈண்டறிதற் பாலன. சீவக. 2128. உரை. (பிரதிபேதம்)1ஒன்னோர்கள், 2எத்தன்மையையுடையோர்களுடைய, 3வருத்தங்கனைகின்ற, 4இழ்ந்த தோள், 5மருதப்பாட்டு முற்றும், மருதத்துக்கு நச்சினார்க்கினியார் செய்தவுரை முடிந்தது இது ஆசிரியன்பாரத்துவாசிகக. தளிபெறு.
|