பக்கம் எண் :

நான்காவது முல்லை619

47ஆங்கு, ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு
முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு.

இஃது "ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெய, ராவயின் வரூஉங் கிழவரு முளரே" என்னும் (1) சூத்திரத்தில் ‘திணைநிலைப் பெயராகிய கிழவருங் கிழத்தியரும் உளர்’ என்னும் விதியாற்கொண்ட அத்தலைவிக்கு அவள் தோழி ஆயர் ஏறுதழுவுகின்றமைகாட்டி அவள் அதுகண்டு வருந்தாமல் ஆண்டுப் பெற்ற நன்னிமித்தங் கூறித்தெளிவித்து, 1அதனை அவ்விதியாற்கொண்ட தலைவற்குங்கூறி, மீட்டும் அத்தலைவிக்குத் தஞ் சுற்றத்தார் கூறியிருக்குங் கூற்றினையுங் கூறி, தலைவனும் இன்னும் ஒருஞான்று ஏறுதழுவி நம்மை வரைந்துகொள்வனென்று ஆற்றுவித்தது.

இதன் பொருள்.

தளிபெறு தண்புலத்துத் (2) தலைப்பெயற் கரும்பீன்று
முளிமுதற் பொதுளிய (3) முட்புறப் பிடவமுங்
களிபட்டா னிலையேபோற் (4) றடவுபு (5) துடுப்பீன்று
ஞெலிபுட னிரைத்த 2ஞெகிழிதழ்க் (6) கோடலு


1. தொல். அகத். சூ. 21.

2. "தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத், திருள்படப் பொதுளிய பராரை மராஅத்து" முருகு. 9 - 10.

3. பிடாவென்பது முட்காலையுடையதொரு புதல்; ‘மழைக்குத் தளிர்த்து அரும்பிக் குலையாகப் பூப்பது; இதன்பூ நீண்ட காம்பையும் வெண்ணிறத்தையுமுடையது (அ) "முட்பிடவார்சிறுநெறி" (ஆ) "வான்பிசிர்க் கருவியிற் பிடவுமுகை தகையக், கான்பிசிர்கற்பக்கார் தொடங்கின்றே" (இ) "சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்கண்ணியின் மலருந் தண்ணறும் புறவில்" (ஈ) "குறும்புதற்பிடவி னெடுங்காலலரி" (உ) "நிலவெனத, தொகுமுகை விரிந்த முதுகாற் பிடவின்" எனவருதலும் காண்க. பிடாவென ஒரு மரமும் உண்டென்பர்.

4. "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" தொல். உரி. சூ. 23.

5. (அ) "காந்தட் டுடுப்பிற் கமழ்மடல்" மலை. 336. என்பதும் (ஆ) "கலி. 59 : 3 - 4 வது அடிக்குறிப்பில் காந்தட்டுடுப்பென வந்திருப்பவையும் ஈண்டு அறிதற்பாலன.

6. கோடலென்பது பெரும்பாலும் முல்லைநிலத்துக்குரித்தாகக் கூறப்படும் ஒரு பூங்கொடி; இதன்குலைக்குப் பாம்பின் படமெடுத்தநிலையும்

(பிரதிபேதம்)1இதனை, 2ஞெகிழதழ்க் கோடலும்.