5 | (1)மணிபுரை யுருவின காயாவும் பிறவு மணிகொள மலைந்த கண்ணியர் தொகுபுடன் மாறெதிர் கொண்டதம் மைந்துட னிறுமார் சீறரு முன்பினோன் (2) கணிச்சிபோற் கோடுசீஇ யேறுதொழூஉப் புகுத்தன ரியைபுட னொருங்கு |
எ - து: மழையைப் பெறுகின்ற குளிர்ந்த நிலத்தே நின்ற கார்காலத்து முற்பட்ட மழைக்கு 1அரும்பீனாநின்று முன்புஉலர்ந்த முதலிடத்தே தழைத்த முள்ளைப் புறத்தேயுடைய பிடவம்பூவும், (3) கள்ளுண்டு 2களித்தலுற்றவ னிலைமைபோல அசைந்து 3வளைந்து துடுப்புப்போலும் முகையை முன்னர்
இதன்பூவுக்கு விளக்கும் உவமையாகக் கூறப்படுகின்றன; இஃது இடையராற் சூடப்படுவது; இது பெரும்பாலும் வெண் காந்தளுக்கே பெயராய்வருமென்பர்; இங்குச்செங்காந்தட்கு வந்திருப்பது புண்டரீக மென்பது செந்தாமரைக்கு வருவதுபோல அருகியவழக்கு; (அ) "குருவுடையன கொடிமிடைவொடு குலைவிரிவன கோடல்" (ஆ) "வெஞ்சின வரவின் பையணந் தன்ன, தண்கமழ் கோட றாதுபிணி யவிழ" (இ) "அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்க்கோடல், பூங்குலை யீன்ற புறவு" (ஈ) "கோடலந் தீப மேந்தி" (உ) "வரிவெண்கோடல் வாங்குகுலை வான்பூப், பெரிய சூடிய கவர்காற் கோவலர்" என்பவற்றால் இவை விளங்கும்; இதுவும் மகளிர்வளையலும் ஒன்றற்கொன்று உவமையாதல் இந்நூற்பக்கம் 49 : 1- ஆம் குறிப்பால் அறியலாகும். தோன்றி யென்பதும் இதன்வகைபோலும். 1. (அ "மணிக்காயா" பொருந. 201. (ஆ) "மணியெனத், தேம்படு காயா மலர்ந்த" ஐங். 420. 2. கணிச்சி, மழுவின் வேறாய தொருபடை; இதனை, "கையது கணிச்சி யொடு மழுவே மூவாய், வேலு முண்டத் தோலாதோற்கே" என்பது வலியுறுத்தும். 3. (அ) "நாளா தந்து நறவுநொடை தொலைச்சி, யில்லடு கள்ளின் றோப்பி பருகி.......................தோளோச்சி வலன் வளையூஉப், பகன்மகிழ் தூங்குந் தூங்கா விருக்கை" பெரும்பாண். 141 - 146. (ஆ) "தசும்பு துளங்கிருக்கையென்றது தன் களிப்புமிகுதியால் தன்னை யுண்டாருடல்போல அத்தசும்பிருந்து ஆடும்படியான இருப்பென்றவாறு; இச்சிறப்பான், இதற்கு, ‘தசும்புதுளங்கிருக்கை’ என்று பெயராயிற்று" பதிற். 42 : 11. உரை. (இ) "துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து, பழஞ்செருக் குற்ற வனந்தர்ப் பாணியும்" மணி. 7 : 71 - 72. (ஈ) "அரிய லார்ந்த வனந்தர்" தணிகை. திருநாட்டு. 100. (பிரதிபேதம்)1அரும்பியீனா நின்ற, 2களித்தலுற்றவணிலைமை, 3வளைந்ததுடுப்பு.
|