பக்கம் எண் :

656கலித்தொகை

20ஒள்ளிழை, வாருறு (1) கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற்
(2) காரி கதனஞ்சான் கொள்பவன்

எ - து : கூரிய கொம்பையுடைய கரிய ஏற்றினது கோபத்தை அஞ்சாது அதனைத் தழுவுமவன் இந்த ஒள்ளிய இழையினையுடையாளுடைய வாருதலுற்ற கூந்தலிலே துயிலுதலைப் பெறும். எ - று.

21ஈரரி
1வெரூஉப்பிணை (3) மானோக்கி னல்லாட் பெறூஉமிக்
(4) குரூஉக்கட் கொலையேறு கொள்வான்

எ - து : குரால் 2நிறத்தவாகிய கண்ணினையுடைய கொலைத்தொழிலை யுடைய ஏற்றைத் தழுவுமவன், வெருவுதலையுடைய பிணையாகிய மானோக்குப் போலும் நோக்கினையுடைய இரண்டாகியகண்களையுடைய இந்த 3நல்லாளைக் கூடும். எ - று.

(5)அரி, ஆகுபெயர்.
23வரிக்குழை,
வேயுறழ் (6) மென்றோட் டுயில்பெறும் வெந்துப்பிற்
4சேஎய் சினனஞ்சான் சார்பவன்

...........................பூவைப் புதுமல ராள்'' (சிலப். 17 : கொளு, 1 - 7.) என்னும் பகுதிகள் ஒப்புநோக்கற் பாலன.

1. (அ) ''மகளிர், விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து'' பதிற். 50 : 18 - 19. (ஆ) ''இருளைங் கூந்த லின்றுயில்''
(இ) ''கூந்தன் மெல்லணைத் துஞ்சி'' அகம். 233 : 15, 308 : 13. (ஈ) ''இருண்மென் கூந்த லேமுறு துயிலே''

2. ''காரி கதனஞ்சான்'' கலி. 104 : 74.

3. ''மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே''

4. ''குரூஉக்கட் கொலையேறு'' கலி. 104 : 71.

5. அரி, செவ்வரி கருவரி; இச்சொல் இங்கே அவற்றையுடைய கண்ணை உணர்த்தி நிற்றலான் ஆகுபெய ரென்றார்.

6. ஆடவர் தம்மனைவியர்தோளிற் றுயில்வதாகக் கூறல் மரபு: (அ) ''அரிவை தோளிணைத் துஞ்சிக், கழிந்த நாளிவண் வாழு நாளே'' குறுந். 323. (ஆ) ''தாம்வீழ்வார் மென்றோட டுயிலி னினிதுகொ, றாமரைக் கண்ணா னுலகு'' குறள். 1103.

(பிரதிபேதம்) 1வெரூப்பிணை, 2நிறத்தையுடையனவாகிய, 3நல்லோளை கூடும்வரிக்குழை, 4சேஎசினனஞ்சான்.