பக்கம் எண் :

நான்காவது முல்லை655

போலே பழித்தலற்ற வெள்ளையேற்றையும் பொருகின்ற மாறு பாட்டினாலே ஏனையவற்றின்மேலானபொன்னாற் புனைந்த புகழையுடைத்தாகிய சக்கரப் படையையுடைய திருவாகிய மறுவையுடைத்தாகிய மார்பனைப் போலே அமைந்த கரிய ஏற்றையும் மிக்குவிளங்குகின்ற தாழ்ந்த (1) சடையினையும் ஒரு 1பாகத்திலேமேவுதல்வரும் பிறைபோன்ற நுதலினையுடையாளையு முடைய மூன்று கண்ணையுடையானுடைய நிறம்போலே மாறுபாடு மிக்க குராலேற்றையும் பெருமையையுடையகடல் கலக்கமுறும்படி உள்ளேசென்று மாமரத்தைவெட்டின மீளாக 2போரையுடைய வேலை எந்திய (2) முருகனது நிறம்போல அச்சம்வந்த சிவந்த ஏற்றையும் அவ்வொப்புவருங் குணத்தினை யுடைய வற்றையும் ஒப்பில்லாத பிறவற்றையும் வடிவையுடையவாகியபல மேகங்கள் திரண்டவைபோல முழங்கும்படி விரும்பி விரும்பித் தொழுவிலே புகுதவிட்டார். எ - று.

18அவ்வழி, (3) முள்ளெயிற் றேஎ (4) ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்தடங்கு வான்

எ - து : 3அவ்விடத்து இந்த ஒப்பில்லாத வெள்ளிய ஏற்றின் கழுத்திலே கிடக்குமவன் கூரிய எயிற்றினையும் அழகினையமுடைய இவளைக்கூடும். எ-று.


1. (அ) ''பிறைநுதல் வண்ணமாகின்று'' (ஆ) ''கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப், பிறைநுதல் விளங்கு மொருகண்போல'' (இ) ''பால்புரை பிறைநுதற் பொலிந்தசென்னி. நீல மணிமிடற்றொருவன்'' புறம். 1 : 9. 55 : 4 - 5. 91 : 5 - 6. (ஈ) ''பிறைநெற்றியோடுற்ற முக்கண்ணினார்'' (உ) ''பிறைதாங்கு நெற்றியர்'' (ஊ) ''பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந் தவனே'' (எ) ''திங்க டிலகம் பதித்த நுதலர்'' தேவாரம். என வருதலால், பிறைநு தலென்பதற்கு, பிறையணிந்த நுதலென்று பொருள்கொண்டு 'சடைமே வரும்' என்பதற்கு அதற்கேற்பப்பொருள் கொள்ளினும் அமையும்.

2. முருகவேள் செந்நிறமுடையவரென்பதை, 'செவ்வேள்' 'சேய்' என வழங்கும், பெயர்களும் வலியுறுத்தும். ''உருவு முருவத்தீ யொத்தி'' என்பது பரி. 19 : 99.

3. (அ) ஏறுதழுவினானுக் குரியளிவளெனவந்த கைக்கிளைக்கு, ''முள்ளெயிற்றேஎர் ...................... .கொள்பவன்'' என்னும் பகுதி மேற்கோள். தொல். அகத். சூ. 14. நச். (ஆ) முள்ளெயிறு இந்நூற்பக்கம் 33 : 1-ஆம் குறிப்புப் பார்க்க.

4. ''இவளைப் பெறுமிதோர்...................சார்பவன்'' இவ்வடிகளோடு ''காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ், வேரி மலர்க்கோதை யாள்..............

(பிரதிபேதம்)1 பாகத்தேமேவுதல், 2போரையுடைய முருகனது, 3அவ்விடத்து நல்லாய ரிந்த வொப்பில்லாத.