எ - து : தன் நாட்டைக் கடலினுடைய மிக்க திரையேறிக் கைக்கொண்டு விடுகையினாலே தனக்கு நாடு இடமுண்டாம்படியாக மனத்தின் இளைப் பின்றாய்ப் பகைவரைத் தன் வலியினாலே தாழ்க்கவேண்டி அவர்மேலே சென்று அவருடைய புலிப்பொறியையும் விற்பொறியையும் அவர் நாட்டி னின்றும் போக்கி விளங்குகின்ற கயலை அவ்விடத்தே பொறித்த புகழையுடைய கெடாத தலைமையினையுடைய பாண்டியனுடைய பழைய புகழை நிலைபெ.றுத்தின குடியோடு ஒக்கத் தோன்றின பசுவினத்தில் ஆயரெல்லாரும் சேரத் திரண்டு விளங்குகின்ற வானிலேயுறும்படி 1ஒங்கிய ஒளிபெருகுகின்ற (1) பனைக்கொடி யினையுடைய (2) பாலினதுநிற்ததையுடைத்தாகிய நிறத்தினை யுடையவனைப்
கடன் முன்னி, யணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக், கடுஞ்சினவிறல்வேள்'' (பதிற். 11 : 3 - 6) என்பதும் அதில் சூருடை முழுமுதலென்பதற்கு, ''சூரவன்மா, தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென்றவாறு; இனி, சூரவன்மா தான் ஒருமாவாய் நின்றானென்று புராணமுண்டாயிற் சூரனாதற் றன் மையையுடைய மாவின் முதலென்றவாறாம்' என்று எழுதியிருக்கும் உரைப்பகுதியும் (ஏ) ''போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தபக், காரெதிர்ந் தேற்ற கமஞ்சூ லெழிலிபோ, னீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச், சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்'' (பரி. 18 : 1 - 4) என்பதும் அதன் உரையும், (ஐ) ''கவிழிணர், மாமுத றடிந்த மறுவில் கொற்றத், தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்'' திருமுரு. 59 - 61. என்புழி, ''மாமுத றடிந்த'' என்பதற்கு 'அவுணரெல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினான்' என்று எழுதியிருக்கும் விசேடவுரையும் ஈண்டு அறிதற்பாலன. 1. (அ) ''அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்'' புறம். 56 : 4. (ஆ) ''பொற்பனை வெள்ளையைப் போற்றா தொழுகின்னா'' இன்னா. 1. (இ) ''மடற்பனை யுயர்த்த மதிநிறப் பெருமனுக்கு'' (ஈ) ''கார், வெண்டோட்டிளம் பனைமீமிசை யுயர்த்தோனென விளர்த்த'' (உ) ''வானுற்ற தண்பனை யுயர்த்தவன்'' (ஊ) ''கள்ளவிழும் வெண்டோட்டுக் கரும் பனைமீ மிசையுயர்த்த, வெள்ளிவரை யனையானும்'' (எ) ''போந்தை மீதுயர்த்த வென்றிப் புரவலன்'' பாகவத. (9) சையாதி, 24. (10) வேய்ங்குழல். 11. உருக்குமிணி மண. 1. பிரத்துமனன்மணம். 14. சுபத்திரைமணம். 18. 2. (அ) ''பானிற வண்ணனோக்கிற் பழியுடைத்து'' சீவக. 209. (ஆ) ''பான்மேனியான்'' பழ. 13. (பிரதிபேதம்)1ஒங்கிய பனைக்கொடி.
|