காணினி, (1) தோட்டார் கதுப்பினென் றோழி யவரொடு | காட்டுச்சார்க் கொய்த சிறுமுல்லை மற்றிவை | முல்லை யிவையாயின் முற்றிய கூழையா | யெல்லிற்றுப் போழ்தாயி னீதோளிக் கண்டேனாற் | (2)செல்லென்று நின்னை விடுவேன்யான் மற்றெனக்கு | மெல்லிய தோரா வறிவு. |
எ - து: அதுகேட்டவள், இனிக்காண்பாயாக; பின்னை இவை இதழாலே நிறையப்பட்ட மயிரினையுடைய என் தோழி ஆயத்தாருடனே காட்டிடத்தே பறித்த சிறுமுல்லையென்றாள்; அது கேட்டவன், முடிகூடின மயிரினையுடையாய்! யான் தனியே இவ்விடத்தே 1கண்டேனால்; இருந்த இவை முல்லைப்பூவாயின், இவை தொடுத்துமுடித்து நாங் கூடுதற்குப் பொழுதாயின், ஒளி இத்தன்மைத்தாயிராநின்றது; நின் நினைவு போக்கிலேயாகில் யான் போவென்று விடுவதுஞ் செய்வேன்; பின்னை எனக்கு நின்னைப் போகவிடுதலை 2ஓராது இவண் என் அறிவு இளைத்திராநின்றது; இனி இக்கூட்டத்திற்கு உடம்பட நில்லென்றான். எ - று. இது (3) 3இதோளி ஈதோளியெனச் சுட்டு நீண்டு நின்றது; இது சுட்டு முதலாகிய இகரவீற்று வல்லெழுத்து மிக்கு நின்றது.
1. (அ) ”தோட்டார் கதுப்பினாள்” குறள். 1105. (ஆ) “தோட்டார் குழலியொடு” சிலப். 15: 198. 2. “நின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழிகொண் டென்னெஞ்ச மேவல் செயின்” கலி. 113: 17 - 18. 3. “ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலுமுடைய; அதோளி இதோளி உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத் துளவாகி இக்காலத் திலவாயின. இவை முற்காலத்துளவென்பதே கொண்டு வீழ்ந்தகாலத்தும் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல் செய்த காலத்து உளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர்; அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலி னென்பது” என்று பேராசிரியரும் “ஒருகாலத்து வழங்கிய சொற்கள் ஒருகாலத்து வழங்காதனவுமுள” என்பதற்கு, அதோளி இதோளி உதோளி குயின் என்பவற்றை மேற்கோள் காட்டி, ‘இவை இடைச்சங்கத்திற் காகாவாயின’ (பிரதிபேதம்)1கண்டேனா யிருந்ததிவை, 2ஓராதிவணனறறிவு, ஓராதி வவணனரறிவு, 3இது தொளி யீ தொளியென.
|