பக்கம் எண் :

742கலித்தொகை

இதனால் இருவர்க்கும் புணர்ச்சியுவகை 1பிறந்தது.


என்று நச்சினார்க்கினியரும், “மரபேதானும்” என்னும் (தொல். செய். 80) சூத்திரத்தினுரையில் எழுதி யிருக்கிறார்கள்; ‘இவை இடைச் சங்கத்திற் காகாவாயின’ என்ற நச்சினார்க்கினியருக்குக் கடைச்சங்கத்திற் காகுமென்பது கருத்தென்று கொள்ளலாகாது; இச்சொற்கள் வழக்கி லில்லையென்பதே கருத்தென்று கொள்ள வேண்டும். ஆனால், ‘சுட்டு முதலாகிய விகரவிறுதியும்’ என்னும் (தொல். தொகை. 17) சூத்திரவுரையில் இளம்பூரணர் சுட்டு முதலாகிய இகரவிறுதிக்கு, அதோளி, இதோளி, உதோளி என்னுஞ் சொற்களை உதாரணங்காட்டி யிருக்கிறார். நச்சினார்க்கினியரும் அவரையே பின் பற்றி அச்சூத்திரவுரையில் அப்பகுதிக்கு அச்சொற்களையே உதாரணங்காட்டி யிருப்பதோடு ‘அதோளி - அவ்விடமென்னும் பொருட்டு’ என்று குறிப்பும் எழுதியிருக்கிறார். ‘ஞநமவவென்னும் புள்ளிமுன்னர், யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே” என்னும் (தொல். நூன்மரபு. 27.) சூத்திரத்துரையில், இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ்செய்தலின் அக்காலத்து இந்நான்கு புள்ளிகளின் முன்னும் யகரம் வரப்பெற்று ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன என்று கூறுபவராகிய இவர், அதோளி முதலியசொற்கள் முற்காலத்துளவாகி இவர்காலத்து இலையாயின் ‘சுட்டு முதலாகிய விகரவிறுதியும்’ என்னுஞ்சூத்திரவுரையிலும் ‘இங்ஙனம் ஆசிரியர்சூத்திரஞ்செய்தலின் அக்காலத்துச், சுட்டுமுதல் இகரவீறான சொற்கள் உளவென்பது பெற்றாம் ; அவை இக்காலத்து இறந்தன, என்றன்றோ கூறவேண்டும். இவர் கூற்றுள்ளே முன்னுக்குப் பின் முரணுகின்றதே எனின் முரணாது அமைத்துக்கொள்ளல் வேண்டும். நாமறிந்த அளவில் இச்சொற்குப் பொருளறிவித்தவர் இவரே. அங்கு, அதோளியென்பதற்கு அவ்விடமென்று பொருள்கூறி யிருப்பது போலவே இந்நூலிலும் இச்செய்யுளில் ‘இதோளி’ என்னுஞ் சொல்லுக்கு ‘இவ்விடம்’ என்று பொருள் கூறியிருக்கிறார். இவற்றையும் செய்யுளியலுரையில் இவர் எழுதியிருப்பதையும் நோக்கின், இச்சொற்கள் மிகுதியாக வழங்காமை கருதிச் செய்யுளியலில் அவ்வாறு எழுதினாரென்றும் இவை அருகி வழங்குமென்பதே இவர் கருத்தென்றும் கொள்ளுதலேதகுதியாம். “கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக் கனைகுர னாரைவண் டானம்” (சீவக. 2108.) என்பதனுரையில் ‘பூணிகம்பு ளென்பன இறந்தவழக்கு’ என்று இவர் 

(பிரதிபேதம்)1தோன்றிற்று.