பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்885

இது ‘‘பொழுது தலைவைத்த கையறு காலை, யிறந்த போலக் கிளக்குங் கிளவி, மடனே வருத்த மருட்கை மிகுதியொ, டவைநாற் பொருட்க ணிகழு மென்ப’’ (1) இச்சூத்திரம் பின்னர் நான்கும் ‘‘பெருந்திணை பெறுமே’’ (2) என்ற சிறப்புடைப்பெருந்திணையன்றிப்பெருந்திணைக் 1குறிப்பாகக் கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ‘ஏறியமடற்றிறம்’ (3) முதலிய நான்கனுள் ஒன்றாய் 2முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழுவிவந்த ‘தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம்’ (4) ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது.


(இ) ‘‘நின்றா னுள்ளந் தேறுரைக்க நீத்தந் தெளிவ தெனத்தெளிந்து’’ பிரமோத்தா. வஞ்சுளைமுத்தி. 99.

1. தொல். பொருளி. சூ. 42. இச்சூத்திரத்தினுரையிலும் இது, ‘பின்னர் நான்கும்.................கூறத்தகாதன கூறலும் பிறவுமாம்’ என்று இவ்வாறே பொருள்எழுதி இச்செய்யுளை மேற்கோள்காட்டி, 892-ஆம் பக்கத்திலுள்ள ‘இதனுள் அந்திக்காலத்தே...........மிகுதியிறந்தவாறுங் காண்க’ ‘எல்லிரா நல்கிய.........வரைவு நிகழ்ந்தவாறுங் காண்க’ என்ற குறிப்புக்களையுமெழுதி, ‘இதற்குப் பொருளுரைக்குங் கால் கேட்பீராக இவள் நக்கு, நக்க அப்பொழுதே அழும். இங்ஙனம் அழுமாறு காமத்தை *ஊழானது (*உயிரானது என்றும் பிரதிபேதம்) அகற்றலின், அஃதறுதியாக நரம்பினும் பயனின்றாயிருந்தது. ஓஓ இதனையுற்ற இவள் அல்லற்பண்பைப் பாராதே அழிதக யாங்குறுகினோம், குறுகிய யாம் இதனை முடிவுபோகக் காண்பேமென்று வந்து எல்லீரும் என்செய்தீர்? என்னை இகழ்கின்றீரோ? இவ்வருத்தத்தை எனக்குறுத்தினவனது மாயஞ்செய்த மலர்ந்த மார்பை யான் முயங்கிக் கூடினும் இகழ்ச்சியன்றாம்; என்றற் றொடக்கமாய் வரும்’ என்று இவ்வுரையாசிரியர் வரைந்திருப்பது இங்கே அறிதற்பாலது.

2. தொல். கள. சூ. 14.

3. தொல். அகத். சூ. 51.

4. தொல். அகத். சூ. 54. (அ) இச்சூத்திரப் பகுதியினுரையில் தேறுத லொழிந்தகாமத்துமிகுதிறமென்பது பெரும்பாலும் தலைமகட்கேயுரித் தென்று கூறி, அதற்கு இச்செய்யுளை மேற்கோள் காட்டினர் இளம்பூரணர்; (ஆ) தொல். அகத். சூ. 13. உரையில், ‘புரிவுண்ட புணர்ச்சியென்றது முதலிய ஆறுபாட்டும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணை. இவற்றை நெய்தலுட் கோத்தார் சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின்’ என்றும் (இ) தொல். அகத். சூ. 51. உரையில், ‘புரிவுண்ட புணர்ச்சியென்னும் நெய்தற்பாட்டுக் காமத்து மிகுதிறம்; இதனைப் பொருளியலுட் 

(பிரதிபேதம்)1குறிப்பாயக கந்திருவத்துட், 2முன்னர் வழுவிவந்த.