வஞ்சித்து இன்பத்தை உண்டாக்கிப் பின்னர் அவ்வின்பம் போம்படி என்னைக் கைவிட்டான்; அக்களவொழுக்கத்தாலே என் மெல்லிய தோளை 1மெலிவித்தவனை (என்) நெஞ்சு பொருந்தி அவனுறைகின்ற இடத்தே சென்று வருதற்கு நெடுங்காலத்த[வ](த)ாயிற்று என்று கூறினாள். 17 | ஒன்றி, 2முயங்குமென் றென்பின் வருதிர்மற் றாங்கே 3யுயங்கினா ளென்றாங் குசாதிர்மற் (1) றந்தோ |
(ஒ) ‘‘குனிந்த வூசலிற் கொடிச்சிய ரெடுத்தவின் குறிஞ்சி, கனிந்த பாடல்கேட் டசுணமா வருவன காணாய்’’ (ஒள) ‘‘வாம மேகலை வானர மங்கையர், காமப் பூசற் களியிசைக் கள்ளினாற், றூம மேனி யசுணந் துயில்வுறு, மேம கூட மெனுமலை யெய்துவீர்’’ கம்ப. பாயிர. 8; சித்திரகூடப். 24; நாடவிட்ட. 14. (ஃ) ‘‘வண்டியா, ழென்னா வசுண மிறைகொள்ளு நாடர்’’ தஞ்சை. 225. (அஅ) ‘‘திவவியா ழரமகளிர் தடவந்த வொலிகேளாச், செம்மாந்துள்ள, நவையின் மணிக் குடுமிதொறு மசுணமுறை புட்பகமா நளிவான் குன்றும்’’ இலிங்க. நவவருட. 48. (ஆஆ) ‘‘முரசொலி கேட்ட வசுணமென்புள்ளின் மூச்சவிந் தொருவழி தேறி’’ கூர்ம. இராமன்வனம். 6. (இஇ) ‘‘வசைபடு மன்னவன் வாய்மை யாலறை, விசிமுழ வொலிசெவி வெதும்பக் கேட்டலு, மிசைபடு மன்னவற் கிரங்கி னோரெலா, மசுணமென் புள்ளென வலமந் தேங்கினார்’’ நைடத. நகர்நீங்கு. 34. (ஈஈ) ‘‘காழுடைப்புறக் கழைகளின் றுளைதொறுங் கால்பரந் திசைக்கின்ற, வேழிசைக்குள முருகிமெய் புளகெழ விறைகொளு மசுணங்க, டாழழற்சுடர் சுடச்சுட வெடித்தெழு சடுலவோ சையின்மாய்ந்த’’ (உஉ) ‘‘பண்ணுக் குருகிப் பறையாலகப் பட்ட மான்போல்’’ வில்லி. காண்ட. 20. வெளிப்பாட்டு. 34. (ஊஊ) ‘‘ஏற்றதோரிசையினாலே யிறக்குமாலசுணம்’’ பாகவதம். (11) உத்தவர். 6. (எஎ) ‘‘மறக்கும்ப தந்தியுஞ் சேலு மசுணமும் வண்டினமும், பறக்கும் பதங்கமும் போலைவ ராற்கெடும் பாதகரே’’ திருவேங்கடத். 28. (ஏஏ) ‘‘குழலிசைகேட் டருகணையு மசுணமென’’ காஞ்சிப். அந்தகேச. 8. (ஐஐ) ‘‘பேரிகை முழக்கிய பிறங்கு மோசையா, லாரிட ருழந்துவீ ழசுண மாவென’’ விநாயக. மகோற்கடர். 232. என்ற தமிழ்நூற் பகுதிகளாலும் (ஓஓ) சுக்கிரநீதி. 1 : 102. என்ற வடநூற் பகுதியாலும் அறியலாகும். 1. அந்தோவென்பது, ‘இரக்கத்தின்கட்குறிப்பு’ கோவையார். 72. உரை. ‘இரக்கக்குறிப்பு’ சீவக. 1036. உரை. ‘இரக்கங்குறித்து வருவதோரிடைச்சொல்’ நன். இடை. சூ. 2. மயிலை சங்கர, விருத்தி. இரா. (பிரதிபேதம்)1மெலிவித்தவனை நெஞ்சு, 2முயங்குவெமென்று, 3உயங்கிறா ரென்றாங்கு.
|