பக்கம் எண் :

898கலித்தொகை

பறையறைந் தாங்கொருவ னீத்தா (1) னவனை
1யறைநவ நாட்டினீர் கொண்டுதரின் யானு
நிறையுடையே னாகுவேன் மன்ற மறையினென்
மென்றோ 2ணெகிழ்த்தானை மேஎ யவனாங்கட்
சென்றுசேட் பட்டதென் னெஞ்சு

எ - து: அங்ஙனங் கூறுகின்றவள் வஞ்சனையாலே தான் வாசித்த யாழிசையைக் கேட்ட (2) ‘அசுணமாவை இவ்வின்பமுற்றதென்று அருள் 3பண்ணாதே முன்பு செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னை அதன் அரிய உயிர்போம்படி பறையைத் தட்டினாற் போலே ஒருவன் முன்னர் 


1. ‘‘அவனை....................மன்ற’’ என்னும் பகுதிக்கு உரை பின்பு உள்ளது.

2. அசுணமென்பது விலங்குகளுள் ஒன்றென்று பலவிடத்தும் பறைவகளுள் ஒன்றென்றுசிலவிடத்தும் வழங்கப்படுகிறது. இதற்கு யாழொலி (குழலொலி வண்டொலி பாட்டொலி) முதலிய மெல்லிசையால் இன்புறுதல் முதலியவையும் பறையொலி (முரசொலி வெடியொலி) முதலிய வல்லிசையால் துன்புறுதல் முதலியவையும் இயல்பு. இதனைக் குறிஞ்சி நிலத்துக் குரியதென்றும். புகைபோன்ற மேனியுடையதென்றும் அச்சப்பொருள்களுள் ஒன்றென்றும் சுவையொளியூறோசை நாற்றமென்ற ஐந்தனுள் ஓசையிலீடுபட்டு உயிரையுமிழப்பதென்றும் கூறுவர். இவற்றுள் ஒவ்வொரு செய்தியே தனித்தும் பல செய்திகள் சேர்ந்தும் செய்யுட்களிற் பயின்று வருதலும் பிறவும் (அ) ‘‘மாதர் வண்டி னயம்வருந் தீங்குரன், மணநாறு சிலம்பி னசுண மோர்க்கு, முயர்வரை நாடன்’’ (ஆ) ‘‘அசுணங் கொல்பவர் கைபோனன்று, மின்பமுந்துன்பமுமுடைத்தே‘‘ நற். 244 : 3-5; 304 : 8-9. (இ) ‘‘இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத், திருங்கல் விடரளை யசுண மோர்க்குங், காம்பம விறும்பின்’’ அகம். 88 : 11 - 13. (ஈ) ‘‘பறைபட வாழா வசுணமா’’ நான்மணி. 4. (உ) ‘‘இன்ன ளிக்குரல் கேட்ட வசுணமா, வன்னளாய்’’ சீவக. 1402. (ஊ) ‘‘கோவலர் கொன்றைத் தீங்குழ, லுலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே’’ சூளா. நாட்டுச். 28. (எ) ‘‘இசைகொள் சீறியா ழின்னிசை கேட்ட, வசுண நன்மா வந்நிலைக் கண்ணே, பறையொலி கேட்டுத்தன் படிமறந் தது போல்’’ பெருங். (1) 47. 241 - 243. (ஏ) ‘‘அச்சப்பொருளாவன, ‘வள்ளெயிற் றரிமா....... குன்றுறை யசுணம்’ என்று சொல்லப்பட்டன போல்வன’’ தொல். மெய்ப். சூ. 1. நச். உரை. (ஐ) ‘‘இசைகேட்ட வசுணமாத் தாழ்ச்சிபோல்’’ மேரு. வைசயந்த. 44. (ஒ) ‘‘துறையடுத்த விருத்தத் தொகைக்கவிக், குறையடுத்த செவிகளுக் கோதில் யாழ், நறையடுத்த வசுணநன் மாச்செவிப், பறையடுத்தது போலுமென் பாவரோ’’

(பிரதிபேதம்)1யறைகல நாட்டினீர், 2ஞெகிழ்த்தானை, 3பண்ணாதென்றருள்பண்ணாதே.