| தெளிய விசும்பினு ஞாலத் தகத்தும் வளியே யெதிர்போம் பலகதிர் ஞாயிற் றொளியுள் வழியெல்லாஞ் சென்று முனிபெம்மை யுண்மை நலனுண் டொளித்தானைக் காட்டீமோ காட்டாயேன், மண்ணக மெல்லா மொருங்கு சுடுவேனென் கண்ணீ ரழலாற் றெளித்து; |
45 | பேணான், துறந்தானை நாடு மிடம்விடா யாயிற் பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப் புறங்காலிற் போக விறைப்பேன் முயலி னறம்புணை யாகலு முண்டு; |
49 | துறந்தானை, நாடித் தருகிற்பா யாயி னினக்கொன்று பாடுவே னொன்னோ யுரைத்து; |
51 | புல்லிய கேளிர் புணரும் பொழுதுணரே னெல்லியா கெல்லையென் றாங்கே பகன்முனிவ னெல்லிய காலை யிராமுனிவன் யானுற்ற வல்லல் களைவர ரிலேன்; |
55 | ஒஒகடலே, தெற்றெனக்கண்ணுள்ளேதோன்றவிமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கான் மற்றுமென் னெஞ்சத்து ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய் செய்யு மறனில் லவன்; |
59 | ஒஒகடலே, ஊர்தலைக் கொண்டு கனலுங் கடுந்தீயு ணீர்பெய்தக் காலே சினந்தணியு மற்றிஃதோ வீரமில் கேள்வ னுறீஇய காமத்தீ நீருட் புகினுஞ் சுடும்; |
63 | ஒஒகடலே, எற்றமி லாட்டியென் னேமுற்றா ளென்றிந்நோ யுற்றறியா தாரோ நகுக நயந்தாங்கே யிற்றா வறியின் முயங்கலேன் மற்றென்னை யற்றத்திட் டாற்றறுத்தான் மார்பு; ஆங்கு; |