68 | கடலொடு புலம்புவோள் கலங்கஞர் தீரக் கெடலருங் காதலர் துனைதரப் பிணிநீங்கி யறனறிந் தொழுகு மங்க ணாளனைத் திறனிலா ரெடுத்த தீமொழி யெல்லா நல்லவை யுட்படக் கெட்டாங் கில்லா கின்றவ ளாய்நுதற் பசப்பே. |
(1) இதுவுமது. இதற்கும் (2) அவ்வுரை கூறிக்கொள்க. இதன் பொருள் | நன்னுதால் காண்டை நினையா நெடிதுயிரா வென்னுற்றாள் கொல்லோ (3) விஃதொத்தி (4) பன்மா ணகுதருந் தன்னாணுக் கைவிட் டிகுதருங் கண்ணீர் துடையாக் கவிழ்ந்து நிலனோக்கி | 5 | யன்ன விடும்பை பலசெய்து தன்னை வினவுவார்க் கேதில சொல்லிக் கனவுபோற் றெருளு மருளு மயங்கி வருபவள் கூறுப கேளாமோ சென்று |
எ - து: நன்றாகிய நுதலினையுடையாய்! இவளொருத்தி (5) தனக்குரிய நாணினைக் கைவிட்டுத் 1தன் மனத்தே ஒன்றை நினைத்து நெட்டுயிர்ப்புக் கொண்டு வீழ்கின்ற கண்ணீரைத் துடைத்துப் பிறரை நோக்காது நிலத்தைக் கவிழ்ந்து நோக்கித் தன்னை நீ உற்றது என்னென்பார்க்குக் கனவின்கண் வாய்வெருவிக் கூறுவாரைப்போலே உத்தரமல்லாதன சில சொல்லிப் பலகாலும் நகுதலைச் செய்யும்; இங்ஙனந் தெளிவும் மயக்கமுமாய் மயங்கி வேறும் அத்தன்மையவாகிய இடும்பைகள் பலவற்றையுந் தன்னிடத்தே உண்டாகக் கொண்டு வருகின்றவள் என்ன துன்பமுற்றாளோதான்? இவளைக்
1. இச்செய்யுளும் தேறுதலொழித்த காமத்து ‘மிகுதிறமாகிய பெருந்திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச். 2. இந்நூற்பக்கம் 885-886. பார்க்க. 3. ‘‘இஃதொத்தி’’ கலி. 143 : 8; ‘‘இஃதொத்தன்’’ (கலி. 64 : 8) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 4. இந்நூற்பக்கம் 288 : 3-ஆம் குறிப்புப் பார்க்க. 5. ‘‘சிறந்ததன் னாணும்’’ (கலி. 145 : 10.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1தான் மனத்தே.
|