பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்923

18தாழ்பு, துறந்து தொடிநெகிழ்த்தான் போகிய கான
(1) மிறந் (2) தெரி நையாமற் பாஅய் முழங்கி 
வறந்தென்னை செய்தியோ வானஞ் சிறந்தவென்
கண்ணீர்க் கடலாற் (3) கனைதுளி வீசாயோ
கொண்மூக் குழீஇ முகந்து

 எ - து: அங்ஙனங் கூறி அவர் நக்கதனால் யாம் இங்ஙனமாயினே மென்று கருதி அழுகின்றவள் ஆண்டெழுந்த வெண்மேகத்தைநோக்கி, வானமே! நீ பெய்யாதே வறந்து என்னைகாரியஞ் செய்கின்றாய்? நின் இனத்தோடே கூடி என் கண்ணீராற் சிறந்த கடலிலே முகந்து பரந்து முழங்கி முன்னர் என்னிடத்தே தாழ்ந்து பின்னர் என்னைத் துறந்து 1செருகுந் (4) தொடியை உட்பட நெகிழ்த் தவன் போகிய கானத்தினை நெருப்பு மிக்குச் சுடாமற் செறிந்த துளியை வீசாயோ? வீசென்று மழையை நோக்கிக் கூறினாள். எ - று.

23நுமககெவன் போலுமோ வூரீ ரெமக்குமெங்
(5) கண்பாயல் கொண்டுள்ளாக் 2காத லவன்செய்த 

 


மக்கட்குப் பலகலைக்குரிசில் பவணந்தியென்னும் புலவர் பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான் உலகமலையாமை யுள்ளிட்ட பத்தழ கோடும் பிறந்து நின்றது இச் சூத்திரமென்று உணர்க’ என்று (நன். பத. சூ. 10. சங்கரவிருத்தி) காணப்படுவதும் (ஒ) “தக்கவின்ன தகாதன வின்னவென், றெக்க வுன்னல ராயி னுயர்ந்துள, மக்களும் விலங்கே”(கம்ப. வாலி. 112.) என்பதும் இங்கே அறிதற்பாலன.

1. (அ) “வியப்பிறந்தன்றே” புறம். 217 : 9. (ஆ) “இறப்பச் சிறிதென்னாது” (இ) “இறப்ப நினையுங்கால்” 
(ஈ) “இறப்பவே தீய செயினும்” நாலடி. 99; 174; 223. (உ) “இன்ப மிறந்ததே” சீவக. 970. (ஊ) “இறப்பப் புகழ்ந்தன்று” பு. வெ. கைக். ஆண்.7. என்பவற்றிலும் இறத்தலென்பது, மிகுதலென்ற பொருளில் வருதல் காண்க.

2. (அ) “கோடெரி நைப்பவும்” பொருந. 234. (ஆ) “எரிகானநைப்ப” நற். 177 : 1. (இ) “ ஒள்ளெரி நைப்ப” புறம். 240 : 10.

3. (அ) “ கனைதுளி” (ஆ) “கனைபெயற் றண்டுளி” கலி. 16: 7; 90: 22.

4. இந்நூற்பக்கம் 840 : 1-ஆம் குறிப்பும் இச்செய்யுள் 47-ஆம் அடியும் இங்கே அறிதற்பாலன.

5. (அ) “ கண்பாயல் கொண்டு” (ஆ) “கண் பாயல் கொள” (இ) “கண் பாயல் பெற்றபோல்” கலி. 70 : 8; 87 : 16; 119 : 5.

(பிரதிபேதம்)1நெருங்குந் தொடியை, 2காதலவன் செய் பண்பு.